பறவைகளின் வீடு

கே. பாஸ்கரன்.

பகலின் சிறகுகள் என்ற எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையைப் படித்தேன்.

படிக்கப் படிக்க சினிமா பார்ப்பது போலவே இருந்தது. இதனை அப்படியே சினிமாவாக எடுக்கலாம்.

கொரோனா காலத்தில் கூண்டு பறவைகள் விற்கும் பெண் அத்தனை பறவைகளையும் தன்னுடைய அபார்ட்மெண்டிற்குக் கொண்டு வந்து பாதுகாக்கிறாள்.  கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் பறவைகளை வெறுக்கிறார்கள். அதே அடுக்குமாடிக்குடியிருப்பில் பறவைகளின் இன்னிசையைக் கேட்டு நம்பிக்கை கொள்ளும் வாட்ச்மேன் இருப்பதைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

இந்தச் சிறு கதையில் வரும் அப்பாவைப் போலவே கொரோனா துவங்கும் போது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நானும் நினைக்கவில்லை. அப்பா ஆட்கள் யாருமில்லாத மெரினா பீச்சிற்குப் போய் நிற்பது போல நானும் ஒரு நாள் நின்றிருந்தேன். கதையில் வரும் மகள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கிறாள்.

ஒரு சிறுகதைக்குள் எத்தனை நிகழ்ச்சிகள். மகளுக்கும் அப்பாவிற்குமான அன்பு. கூண்டு பறவை விற்பவர்களின் உலகம். காதல் பறவைகளை  வளர்ந்த கிழவர் கொரோனாவில் இறந்துவிட அவரது பறவையை  அபார்ட்மெண்ட்வாசிகள் கொல்ல நினைப்பது எனக் கதை வளர்ந்து கொண்டே போகிறது.

பகலின் சிறகுகள் தொகுப்பில் நிறைய நல்ல சிறுகதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றிப் பத்துப் பக்கம் எழுத வேண்டும் போலிருக்கிறது.

0Shares
0