பாரதி பாஸ்கர் சிறந்த மேடைப் பேச்சாளர். தேர்ந்த வாசகர். தன் பேச்சின் நடுவே தான் படித்த நல்ல புத்தகங்கள், கதைகள் குறித்து அழகாக எடுத்துப் பேசக்கூடியவர். அவரது மேடைப்பேச்சை ரசித்துக் கேட்டிருக்கிறேன். சிரித்த முகத்துடன் ,கடுஞ்சொல்லால் எவரையும் தாக்கிப் பேசாமல்,மிக நாகரீகமான முறையில், அழகாகத் தனது கருத்துகளை முன்வைக்கக்கூடியவர்.
லாக்டவுன் காலத்தில் அவர் தனக்கு விருப்பமான சிறுகதைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார். தி.ஜானகிராமன், வண்ணதாசன். அ.முத்துலிங்கம் சூடாமணி எனச் சிறந்த படைப்பாளிகளின் கதைகளைப் பாரதி பாஸ்கர் சிறப்பாக அறிமுகம் செய்து வாசித்துள்ளார்.
இந்த வரிசையில் எனது சிறுகதை ஷெர்லி அப்படித்தான் குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி.
ஷெர்லி அப்படித்தான்.
காணொளி :