பாராட்டு விழா

கனடா தேசத்தின் இலக்கியத்தோட்டம் வழங்கும் சர்வதேச இலக்கிய விருதான இயல்விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு உயிர்மை சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது

இந்த விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெற இருக்கிறது

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இந்திரா பார்த்தசாரதி,  பேராசிரியர் ஞானசம்பந்தம், பாரதி கிருஷ்ணகுமார், இறையன்பு ஐஏஎஸ்,     இலக்கிய ஆசான் எஸ்.ஏ.பெருமாள், விஜயசங்கர் எடிட்டர் பிரண்ட்லைன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்

இவர்களுடன் தமிழ்திரையுலகின் முன்னணி இயக்குனர்கள், நட்சத்திரங்கள், இலக்கியவாதிகள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழ் இலக்கிய உலகமும் திரையுலகமும் இணைந்து கொண்டாடும் இந்த பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன்

இடம் : காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை.

நாள் : 02.02.2012 வியாழக்கிழமை

நேரம்: மாலை ஆறுமணி

••

0Shares
0