இன்று எனது பிறந்தநாள்.
தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகுந்த நன்றி.
பிறந்த நாளில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எனது நண்பர்களும் வாசகர்களும் ஒன்றிணைந்து தேசாந்திரி என்ற இலக்கிய அமைப்பினை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை நான் வழிநடத்த இருக்கிறேன்.
இதன்வழியே இந்தியப்பயணங்கள், சிறுகதை, கவிதை, நாவல், திரைக்கதை பயிற்சிமுகாம்கள், புத்தக அறிமுகக் கூட்டங்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், சிறார்களுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி, குறும்படத்திரையிடல் எனப் பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்துச் செயல்படுத்த இருக்கிறார்கள்.
தேசாந்திரியோடு இணைந்து செயல்பட விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்க :
desanthiri2016@gmail.com
தேசாந்திரி லோகோ வடிவமைப்பு
ஒவியர் ரோகிணி மணி