புத்தகக் காட்சியில் -1

நேற்று மாலை  சென்னை புத்தகக் காட்சி சிறப்பாக துவங்கியது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 391  & 392னை  தயார்படுத்தும் பணி காலையிலிருந்து நடைபெற்றது.  நான்கு மணிக்கு புத்தக காட்சிக்குச்  சென்றேன். ஸ்ருதிடிவி நேரடியாக புத்தக கண்காட்சி குறித்த செய்திகளை சிறப்பாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் பற்றிய எனது  நேர்காணல் ஒன்றினை ஸ்ருதி டிவி பகிர்ந்திருக்கிறார்கள். ஸ்ருதி டிவி கபிலனுக்கு நன்றி

நேற்று மாலை எழுத்தாளர்கள் பா.ராகவன்,  விமலாதித்த மாமல்லன், தமிழ்மகன், லட்சுமி சரவணக்குமார் , அகரமுதல்வன், மருதன், ஹரன் பிரசன்னா, அதிஷா ஆகியோரையும் பத்ரி சேஷாத்ரி, காலச்சுவடு கண்ணன், கிருஷ்ணபிரபு, பரிசல், ஆகியோரைச் சந்தித்தேன். நிறைய இளைஞர்கள் தேசாந்திரி பதிப்பகத்திற்கு வந்து நூல்களை பெற்றுப் போவது சந்தோஷம் அளித்தது. சிலருடன் உரையாட முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி

இன்று மாலை 4 மணி முதல் எட்டரை வரை புத்தக காட்சியில் தேசாந்திரிஅரங்கு எண் 391  & 392ல் இருப்பேன்.

இன்றிரவு 10 மணிக்கு சன் செய்தி தொலைக்காட்சியில் புத்தக கண்காட்சி குறித்த எனது  நேர்காணல் ஒளிபரப்பாகிறது.

எனது நூல்கள் அனைத்தும் தேசாந்திரியில் கிடைக்கின்றன.

ஸ்ருதிடிவி காணொளி

https://youtu.be/gYSTUJEqzJs

நன்றி

புகைப்படங்கள்

பாலா, ஹர்ஷி

ஸ்ருதிடிவி

0Shares
0