புத்தக் கண்காட்சி மூன்றாம் நாள்

இன்று புத்தகக் கண்காட்சியினுள் மிகப்பெரிய கூட்டம். விடுமுறை தினம் என்பதால் நிரம்பி வழிந்தது கண்காட்சி.  இத்தனை வாசகர்களை காண்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது.  கடந்த இரண்டு நாட்களாக தொண்டைவலி. அதன் காரணமாகத் தொண்டைகட்டிக் கொண்டுவிட்டது.  சரியாகப் பேசமுடியாத சிரமம்.  என் அம்மா உங்கள் வாசகர், எனது அக்கா உங்களது வாசகர் என்று சொல்லி புத்தகம் வாங்கிப்போகும் இளைஞர்களை கண்டேன். ஒரு வாசகர் தன் அம்மாவிற்காக எனது புத்தகங்களில் 25யை ஒரே நேரத்தில் வாங்கிக் கொண்டு வந்து கையெழுத்து கேட்டார். அத்தனையிலும் அந்த அம்மாவின் பெயர் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். இவர்களின் அன்பு தான் என்னை எழுதவைக்கிறது.

***

நண்பர் விமலாதித்த மாமல்லன் எழுதிய புத்தகங்கள் தேசாந்திரி அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன

தி இந்து நடுப்பக்க ஆசிரியர், எனது நண்பர் சமஸ் எழுதிய நூல்களும் தேசாந்திரி அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன

•••

0Shares
0