அனைவருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
சென்னைப் புத்தகத் திருவிழாவில் நேற்று நிறைய கூட்டம். பலரும் எனக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.
புத்தகத் திருவிழாவில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் கடையில் வங்கச் சிறுகதைகள். ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி போன்ற சிறந்த நூல்கள் கிடைக்கின்றன.

பறவையியலாளர் சாலிம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூல்

இவான் துர்கனேவின் தந்தையரும் தனயர்களும் நாவலின் சிறப்புப் பதிப்பை நூல் வனம் வெளியிட்டுள்ளது. சிறந்த ரஷ்ய நாவல். துர்கனேவின் எழுத்து நடை கவித்துவமானது. இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. நூல்வனம் அரங்கில் இந்த நாவல் கிடைக்கிறது

வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கை வரலாற்று நூல். குறிஞ்சி வேலனின் சிறப்பான மொழியாக்கம்.

ஞானபீடம் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் சிவராம் காரந்தின் வாழ்க்கை வரலாற்று நூல். கவிஞர் சிற்பி சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் இதனை வெளியிட்டுள்ளது

கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியனின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகள். எதிர் வெளியீடு. மிகச் சிறந்த கவிதைகள் உள்ள புத்தகம்.

க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள பியரெத் ஃப்லுசியோ எழுதிய சிறந்த பிரெஞ்சு நாவல்.

மொழிபெயர்பாளர் வெ. ஸ்ரீராம் எழுதிய இலக்கியக் கட்டுரைகள். பிரெஞ்சு நாவல்கள் மற்றும் இலக்கியப் போக்குகள் குறித்த சிறந்த கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. பாதரசம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது
