பெட்ரோ பராமோ

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள பெட்ரோ பராமோ நாவலின் அறிமுகக் கூட்டம் ஜனவரி 6 திங்கள்கிழமை மாலை சென்னைப் புத்தகத் திருவிழா அரங்கிலுள்ள சிற்றரங்கில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

ரூல்போவின் பெட்ரோ பரோமா மற்றும் எரியும் சமவெளி இரண்டு நூல்களையும் எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிமுக நிகழ்வில் பா. வெங்கடேசன் எரியும் சமவெளி சிறுகதை தொகுதி குறித்து உரை நிகழ்த்துகிறார். சுபத்ரா இந்த நூலை மொழியாக்கம் செய்துள்ளார்

0Shares
0