எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நடத்துகிறார். இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
பிஸியோதெரபிஸ்டான மணிபாரதி தொடந்து அழகம்மை அரங்கம் சார்பாக நவீன நாடகங்களை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்னர் எனது “கொஞ்சம் இனிப்பு அதிகம்” என்ற சிறுகதையை நாடகமாக இயக்கியிருந்தார்.
ஞானராஜ சேகரன் ஐஏஎஸ் “ராமானுஜன்” திரைப்படத்தில் மணிபாரதியை கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மணிபாரதி நடித்துள்ளார்
தற்போது இந்த வருடத்திற்கான Short+Sweet நாடக நிகழ்வில் எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நிகழ்த்தவுள்ளார்.
நவம்பர் மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள அல்லையன்ஸ் ஃபிரான்சேஸ் அரங்கில் நிகழ்கிறது.
டிக்கெட் பெறுவதற்கு
https://in.bookmyshow.com/plays/week-3-short-sweet-south-india-theatre-festival/ET00343397