எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவும் தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டுவிழாவும் மதுரையில் நடைபெற உள்ளது.
உயிர்மை நடத்தும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபறெ உள்ளது, இதில் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்,
நிகழ்ச்சி பற்றிய முழுமையான விபரங்களை சில நாட்களில் தெரிவிக்கிறேன்,
செப்டம்பர் 2 முதல் நடைபெறும் மதுரை புத்தக கண்காட்சியில் 3 மற்றும் 4ம்தேதிகளின் பகலில் உயிர்மை அரங்கில் இருப்பேன், என்னைச் சந்திக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் வரலாம்
••