இணையத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக தொடர்ச்சியாக செயல்படும் சில இணைய இதழ்களைக் குறிப்பிட விரும்புகிறேன்,
சொல்வனம்
மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் , 36 இதழ்கள் வெளியாகி உள்ளன, சிறப்பான மொழிபெயர்ப்புகள். அரசியல், அனுபவம்.விஞ்ஞானம். உலக சினிமா மற்றும் நுண்கலை சார்ந்த கட்டுரைகள் எனத் தனித்துவத்துடன் வெளியாகி வருகிறது. சிற்றிதழ் மரபின் அதே தீவிரம் மற்றும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் மிக முக்கியமான இணைய இதழ்
வல்லினம்
மலேசியாவிலிருந்து நவீன தமிழ் இலக்கியம் சார்ந்து காத்திரமான படைப்புகள். விவாதங்கள். மலேசியச் சூழல் சார்ந்த பதிவுகளுடன் வெளியாகிறது வல்லினம் இணைய இதழ் . இதன் ஆசிரியர் நவீன், சென்ற ஆண்டு முதல் வல்லினம் மாத இதழாக இணையத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
தங்கமீன்
தற்போது சிங்கப்பூரில் இருந்து தங்கமீன் என்ற புதிய இணைய இதழ் உருவாக்கபட்டிருக்கிறது, இலக்கியம், சினிமா, சமூகநிகழ்வுகள், கடந்த காலச்சுவடுகள் என்று இணைய தளம் சிறப்பாக வடிவமைக்கபட்டிருக்கிறது, இதன் முதல் இதழை வாசித்தேன், நன்றாக வந்திருக்கிறது, தங்கள் அறிமுகவுரையில் அவர்களே சொல்வது போல இது சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்தின் குரலாக தனித்து ஒலிக்கிறது, இதனைச் சாத்தியமாக்கிய பாலுமணிமாறன் பாராட்டிற்குரியவர்.