ரிவேரா

மெக்சிகோவின் தலைசிறந்த ஓவியர் டீகோ ரிவேரா.
டெட்ராயிட் நகரிலுள்ள ம்யூசியத்தில் ரிவேரா வரைந்த மிகப்பெரிய சுவரோவியத்தைக் கண்டிருக்கிறேன்.
மறக்க முடியாத ஓவியமது,
அவரது வாழ்க்கையையும் ஓவியங்களையும் புரிந்து கொள்வதற்கு எளிய அறிமுக நூலாக உள்ளது ஜேநெட் மற்றும் ஜோனாஹ்வின்ட்டர் எழுதிய டீகோ ரிவேரா.
நிவேதா இதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
இரட்டைபிள்ளைகளில்  ஒருவராகப் பிறந்த ரிவேரா தனது சகோதரன் நோயினால் இறந்துவிடவே   அந்தோனியா என்ற பூர்வகுடி இந்தியப் பெண் பொறுப்பில் மலைகிராமத்தில் வளர்க்கபடுகிறார். அந்த வாழ்க்கை அவருக்குள் எப்படி ஆழமான பிம்பங்களை உருவாக்கியது என்பதை அவரது ஒவியங்களில் காணமுடிகிறது. மெக்சிக தேசத்தின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் தனது ஒவியங்களில் உண்மையாக வெளிப்படுத்தி அதன் ஆன்மாவாக விளங்கியவர் ரிவேரா.
வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்நூல் சிறுவர்களுக்கானது மட்டுமில்லை. பெரியவர்களும் வாசிக்கலாம்.
ரிவேராவின் முக்கிய ஓவியங்களைப் பயன்படுத்தி அவரது வாழ்க்கையைச் சொல்வது கூடுதல் சிறப்பு.
இந்நூல் https://archive.org/ தளத்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கிறது
0Shares
0