கோவை ஒடிஸி புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற வாசகர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.
புத்தகக் கடையினுள் உள்ள சிறிய இடம் என்பதால் நிறைய பேருக்கு இருக்கை போட முடியவில்லை. நின்று கொண்டே உரையைக்கேட்டார்கள்.
ஒரு மணி நேர உரையும் அதைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடலும் நடைபெற்றது. அதிகம் ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் ஒடிஸி போன்ற நிறுவனம் தமிழ் புத்தகங்களுக்குத் தனிப்பிரிவு அமைத்து சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்துவது பாராட்டிற்குரிய விஷயம்.