வாசிப்பில் இன்று -1

இன்று காலை Anthony Burgess எழுதிய Abba Abba நாவலை வாசித்தேன். 120 பக்கங்கள் கொண்ட சிறிய நாவல்

**

கீட்ஸின் மறுமொழி.

ஆன்டனி பர்கஸ் எழுத்தாளர்களைப் பற்றி நாவல்கள் எழுதக்கூடியவர். இவர் ஷேக்ஸ்பியர் , மார்லோ பற்றி எழுதிய நாவல்கள் சுவாரஸ்யமானவை. புகழ்பெற்ற கவிஞரான கீட்ஸ் மற்றும் பெல்லி குறித்து இவர் எழுதிய சிறுநாவல் Abba Abba

1821 பிப்ரவரி 23ல் தனது இறந்து போனார் கீட்ஸ், அப்போது அவரது வயது 25. காசநோயால் பாதிக்கபட்ட கீட்ஸ் ரோமில் தற்செயலாக இத்தாலிய கவிஞரான கியூசெப் ஜியசாகினோ பெல்லியை சந்திக்கிறார். உண்மையில் இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. தனது புனைவின் வழியே இரண்டு கவிஞர்களைச் சந்திக்க வைத்து அவர்களின் ஊடாகக் கவிதையுலகை கொண்டாடுகிறார் பர்கஸ். இரண்டு பகுதிகளாக உள்ளது இந் நாவல் , முதற்பகுதியில் கீட்ஸ் மற்றும் பெல்லி சந்தித்து உரையாடுகிறார்கள். இரண்டாம் பகுதி கவிதைகளின் வழியாகவே விவரிக்கபடுகிறது.

கீட்ஸின் கவிதைகள் மீது பெரும் விருப்பம் கொண்டவர் பர்கஸ். ஆகவே அவரது படைப்பாளுமையின் வீச்சி வெளிப்படுத்தும் வண்ணம் அவரை ஒரு கதாபாத்திரமாகத் தனது நாவலில் உருவாக்கியிருக்கிறார்

கீட்ஸ் பற்றி Jane Campion என்ற ஆஸ்திரேலிய இயக்குனர் Bright Star என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அது கீட்ஸின் காதலைப் பேசுகிறது. இந்நாவலை வாசிக்கும் போது கவித்துவமாக உருவாக்கபட்ட அப்படம் நினைவில் வந்தபடியே இருந்தது.

நாவலின் ஒரு இடத்தில்

Poetry should hymn the spirit and not talk of asthmatic cats என்கிறார் பெல்லி

அதற்குக் கீட்ஸ் இப்படிப் பதில் சொல்லுகிறார்

I think the time is coming when sonnets must be written about the pains of constipation.

தனக்கு விருப்பமான கவிஞனையும் அவனது கவிதைகளையும் கொண்டாட நாவல் எழுதியிருக்கிறார் பர்கஸ்.

நாவல் உலகில் இது தனிவகை. அதற்காகவே வாசிக்கலாம்

0Shares
0