வானவன்

குட்டி இளவரசன் நாவலை எழுதிய அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் வாழ்வினை மையமாகக் கொண்டு தி பிரின்ஸ் ஆஃப் தி ஸ்கைஸ் நாவல் வெளியாகியுள்ளது. , “தி லைப்ரரியன் ஆஃப் ஆஷ்விட்ஸ்” நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அன்டோனியோ இடுர்பே இதனை எழுதியுள்ளார்.

அன்டோனியோ ஒரு ஸ்பானிஷ் பத்திரிகையாளர், எழுத்தாளர். ஸ்பானிஷ் இதழான லா வான்கார்டியாவில் பணியாற்றுகிறார். சிறார்களுக்காக நிறைய எழுதியுள்ளார். அவருக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் எக்சுபெரி என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நாவலை எழுதியிருக்கிறார்.

எக்சுபெரி மற்றும் ஜீன், ஹென்றி என்ற அவரது இரண்டு நண்பர்கள் குறித்தும் விரிவாகப் பேசும் இந்த நாவல் விமானத் தபால்சேவையில் அவர்கள் எவ்வாறு இயங்கினார்கள் என்பதை விவரிக்கிறது

1920களின் பாரிஸில் தொடங்கும் கதை சஹாரா பாலைவனம், செனகல், பால்மிரா, பியூனஸ் அயர்ஸ், படகோனியா, நியூயார்க் எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. எக்சுபெரியோடு இணைந்து நாமும் வானில் பறக்கிறோம்.

நாவல் விவரிக்கும் காலம் விமானச் சேவையின் ஆரம்ப நாட்கள், விமானிகள் ஒவ்வொரு முறை வானில் பறக்கும் போதும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அவர்கள் கடக்க வேண்டிய கடினமான சூழ்நிலைகள் நாம் அறியாதவை. அவற்றை நாவலில் அன்டோனியோ துல்லியமாக விவரித்துள்ளார்.. இந்த மூன்று விமானிகள் எவ்வாறு விமானச் சேவையின் முன்னோடிகளாகவும் அசாதாரணமான, துணிச்சலான ஹீரோக்களாகவும் ஆனார்கள் என்பதை நாவலில் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.

••

0Shares
0