வாழ்த்துகள் மணிகண்டன்

கவிஞரும் தீவிர இணையச் செயல்பாட்டாளருமான வா.மணிகண்டன் பெங்களூரு வாசகர் சந்திப்பில் தொடர்ச்சியாகச் சிறுகதைகளை முன்வைத்துக் கூட்டங்களை நடத்திவருகிறார்.

இந்த முயற்சிக்கு உறுதுணையாக நான் தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து விவாதித்து வருகிறார்கள்.

100 சிறந்த சிறுகதைகள் நூலை உருவாக்கும் போது இப்படியான செயல்பாடுகளுக்குத் துணையாக இத் தொகுப்பு அமைய வேண்டும் என்பதே எனது முக்கிய விருப்பமாக இருந்தது

அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் மணிகண்டனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இத்துடன் நிசப்தம் அறக்கட்டளை வழியாக அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கல்வி சார்ந்த உதவிகள் இணையத்தை மிகுந்த ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கான அடையாளமாக உள்ளது. அதற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அடுத்தக் கூட்டத்தில் கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், பிச்சமூர்த்தி மற்றும் பி.எஸ்.ராமையா ஆகிய நான்கு எழுத்தாளர்களின் கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றன.

***

0Shares
0