வாழ்த்துகள்

நவீனத் தமிழ் கவிதையின் தனித்துவமிக்க ஆளுமை கவிஞர் கலாப்ரியா.

வடிவ ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தனது கவிதைகளில் இவர் நிகழ்த்திய பாய்ச்சல் குறிப்பிடத்தக்கது.

இவர் நடத்திய குற்றாலம் கவிதைப்பட்டறை மறக்கமுடியாதது.

கவிஞராக மட்டுமின்றி  நாவல், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி பன்முகப் படைப்பாளியாக விளங்குகிறார்.

தமிழ் விமர்சனவுலகில் தனித்துவமிக்க ஆளுமையாக விளங்குபவர் பேராசிரியர் பஞ்சாங்கம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சமகாலப்புனைவுகள் வரை ஆழ்ந்து திறனாய்வு செய்து வருபவர்.

இவர்கள் இருவருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான

‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கு விருது பெறும் அண்ணன் கலாப்ரியா அவர்களுக்கும்,  பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கும்

எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

தொடர்ந்து சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் விளக்கு அமைப்பிற்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள்.

••

0Shares
0