சிலவேளைகளில் நான் ஸ்பூனைத் தவறவிட்டுவிடுகிறேன் என்றான் சிறுவன்
நானும் அப்படிச் செய்வதுண்டு என்றார் கிழவர்
சிறுவன் முணுமுணுத்தான்
டவுசரிலே மூத்திரம் பெய்துவிடுகிறேன்,
நானும் கூட அப்படித்தான் என்று சிரித்தார் கிழவர்
நான் அடிக்கடி அழுகிறேன் என்றான் சிறுவன்
நானும் அப்படியே செய்கிறேன் என்று தலையாட்டினார் கிழவர்
எல்லாவற்றையும்விட மோசம் ,
பெரியவர்கள் என்பிரச்சனைகளைக் கண்டுகொள்வதேயில்லை
என்றான் சிறுவன்
சுருக்கம்விழுந்த கைகளின் இதமான அரவணைப்பை அச்சிறுவன்
உணர்ந்தான்
நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றார்
அந்தச் சிறிய கிழவர்
••
ஷெல் சில்வர்ஸ்டைன் (Shel Silverstein) மிகச்சிறந்த அமெரிக்க கவிஞர் மற்றும் ஒவியர்,
அவரது கவிதைகள் அற்புதமானவை, குழந்தைகளுக்காக அதிகம் எழுதியவர், இவரது முக்கியக் கவிதைகள் யாவும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம், ஒவியத்துடன் இணைந்து இவர் எழுதிய கவிதைகள் தனித்துவமானவை.