தமிழ் பதிப்புலகின் முன்னோடி ஆளுமையான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச தரத்தில் தமிழ் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நேர்த்தியான வடிவமைப்பு. அச்சாக்கம் எனப் புத்தக உருவாக்கத்தைக் கலைப்படைப்பாக மாற்றியவர். அவர் உருவாக்கிய தற்காலத் தமிழ் அகராதி ஈடு இணையற்றது.
க்ரியா பதிப்பகம் போலப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற அளவுகோலை பதிப்புலகிற்கு உருவாக்கித் தந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தேர்ந்த இலக்கிய வாசகர். மிகச்சிறந்த எடிட்டர்.
அவரது முயற்சியின் காரணமாகவே ஆல்பெர் காம்யூ, ஸீக்ஃப்ரீட் லென்ஸ், காமெல் தாவுத், ழாக் ப்ரொவர், ழான்-போல் சார்த்ர், பியரெத் ஃப்லுசியோ, ஃப்ரான்ஸ் காஃப்கா , அந்த்வான் து செந்த்- எக்சுபெரி, ரே பிராட்பரி படைப்புகள் தமிழுக்கு அறிமுகமாகின.
அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்.
