ஸ்லோவேனிய கவிஞர் பீட்டர் செமோலிக்(Peter Semolič) சமகால உலகக் கவிஞர்களில் முக்கியமானவர். அவரது நேர்காணல் ஒன்றில் கவிதை என்பது புரட்சிகரமானது. கவிதையின் வழியாகவே சமூகத்தில் மாற்றங்கள் உருவாகும் என்று பதின்வயதிலிருந்து நம்பி வருவதாகவும் அமெரிக்காவில் கவிதைகள் ஒரு நுகர்வு பொருள் போல மாறிவிட்டதைக் காணும் போது உண்மையில் கவிதையின் இடம் ஒரு சமூகத்தில் என்ன என்பது குறித்துத் தான் குழம்பிப் போய்விட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இது தீவிரமாகக் கவிதை எழுதும் சமகாலக் கவிஞர்கள் பலருக்கும் ஏற்பட்ட குழப்பமே. இந்தியா போன்ற நீண்ட கவிதைமரபு கொண்ட தேசத்தில் கவிதையின் இடம் இன்று எப்படியிருக்கிறது. இரண்டாயிரம் வருஷ கவிமரபு கொண்ட தமிழில் சமகாலக் கவிதைகள் ஏன் மிகவும் குறைவாக வாசிக்கபடுகிறது என்ற கேள்விகள் முக்கியமானவை.
கவிதை இன்று செய்யப்படும் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. செயற்கையான பிளாஸ்டிக் மலர்களைப் போல அவை மலிவு விலை பொருளாக மாற்றம் கொண்டுவிட்டன. அரிய மலர்களோ எவர் கண்ணிலும் படாமல் சூரியனுக்கு முகம் கொடுத்தபடியே தனியே காற்றுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன. தீவிரமான தமிழ் கவிதையின் இடமும் அப்படித்தானிருக்கிறது.

ஸ்லோவேனியாவில் 19 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்லோவேனியாவின் சுதந்திரத்திற்கான தேசிய இயக்கம் வரை கவிதை முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. கவிஞர்களே தேசத்தின் முக்கிய ஆளுமையாக கருதப்பட்டார்கள்.
ஒரு எழுத்தாளன் அல்லது கலைஞனின் இடம் எது என்பது குறித்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீவிரமான சர்ச்சை நடந்து வந்திருக்கிறது. பெரும்படைப்பாளிகளாகக் கருதப்படுகிறவர்கள் அனைவரும் இதற்கான பதிலை எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி. விக்டர் கியூகோ போன்றவர்கள் கலைஞனின் இடம் குறித்துத் தீவிரமாக வாதிட்டிருக்கிறார்கள். கலை என்றால் என்ன என்பது குறித்து அன்று வெளியான புத்தகங்களைக் காணும் போது இதை நன்றாகவே உணர முடிகிறது.
அமெரிக்காவில் சந்தை தான் இலக்கியத்தின் இடத்தைத் தீர்மானிக்கிறது. சந்தைப்படுத்தபடும் வணிகப்பொருட்களில் ஒன்றாகவே இலக்கியப்பிரதியும் கருதப்படுகிறது. சந்தையில் இதன் மதிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் அது நுகர்வுப்பொருளாகவே பதிப்பாளர்களால் கருதப்படுகிறது. ஆகவே அவர்கள் எழுத்தாளர்களைப் பிம்பங்களாக, நட்சத்திரங்களாக உருவாக்கவே முயலுகிறார்கள்.
நுகர்வு பண்பாட்டில் இலக்கியம் புத்தகவாசிப்பு என்பதெல்லாம் நுகர்வின் வழியாகவே தீர்மானிக்கபடுவதாக மாறிவருகிறது. ஆனால் சந்தையால் ஒரு போதும் இலக்கியத்தின் இடத்தைத் தீர்மானம் செய்துவிட முடியாது. அதன் குறுக்கு வழிகள் மூலம் விற்பனையை அதிகப்படுத்தலாம். விருதுகள் வாங்கலாம். ஆனால் இலக்கிய அந்தஸ்தை அடைய முடியாது. சரியான இலக்கியத்தை மதிப்பீடு செய்கிறவர்கள் சிறந்த வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள். கல்விபுலத்தைச் சார்ந்த ஆய்வாளர்களே. இவர்கள் மட்டுமின்றித் தேசத்தின் பண்பாடும் அரசியலும் இலக்கியத்தினை முன்னெடுப்பதிலும் அடையாளப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது

பீட்டர் செமோலிக் இந்தப் பிரச்சனையைத் தான் தனது நேர்காணலில் முக்கியமான குறிப்பிடுகிறார்.
கவிதையைச் சந்தைப்பொருளாக ஒரு போதும் கருதமுடியாது. கவிதையின் வழியாகச் சமூக மாற்றங்களை உண்டாக்க முடியும் என்பது இன்று தேய்வழக்கு போலக் கருதப்பட்டாலும் அது மாறாத உண்மையே. கவிதையை அரசியல் ஆயுதமாக முன்னெடுக்கும் முறை இன்றும் தொடருகிறது. இன அழிப்பிற்கு எதிராகக் கவிதைகள் இன்றும் உண்மையை உரத்துப் பேசுகின்றன. கவிதை எழுதுவதை அரசியல் செயல்பாடாகக் கருதுகிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்
தான் கவிதையின் வழியே மாற்றங்களை உருவாக்க விரும்புகிறேன். இது தனிமனிதனின் அகத்திலோ, சமூக வெளியிலோ எங்கும் ஏற்படலாம். அந்த உயர்ந்த நோக்கமும் கனவுமே கவிஞனை தொடர்ந்து செயல்பட வைக்கிறது என்கிறார் செமோலிக்

வீடற்ற கவிஞன் தன் காதலிக்கு கவிதை ஒன்றை எழுதுவதாகச் செமோலிக் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
••
நான் வார்த்தைகளால் ஆன ஒரு வீட்டைக் கட்டுவேன்.
பெயர்ச்சொற்கள் செங்கற்களாக இருக்கும்
மற்றும் வினைச்சொற்கள் அடைப்புகளாக இருக்கும்..
உரிச்சொற்கள் கொண்டு வீட்டை
அலங்கரிப்போம்
ஜன்னல் ஓரப்
பூக்களைப் போல.
என நீளும் வரிகளுடன் சொற்களால் ஒரு வீட்டினை கட்டுவதைப் பற்றிப் பீட்டர் செமோலிக் சிறந்த கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். இதில் கடவுளைப் போல மனிதனும் பொருட்களுக்குப் பெயரிடுகிறான். ஏற்கனவே இருக்கும் பெயர்களை விலக்கி புதிய பெயர்களை வைப்பதும் புதிதாகப் பொருளை வேறு தளத்தில் வேறு அர்த்ததில் அடையாளப்படுத்துவம் கவியின் வேலை. அதையே பீட்டர் இந்தக் கவிதையில் மேற்கொள்கிறார்.
அவரது கவிதைகள் ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியன், பிரஞ்சு, ஸ்பானிஷ், போலந்து, ஹங்கேரியன், பின்னிஷ், செர்பியன், பல்கேரியன் மற்றும் மாசிடோனியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரும் ஒரு சிறந்த மொழிபெயர்பாளரே. இவர் ஆங்கிலம், பிரெஞ்சு, செர்பியன் மற்றும் குரோஷிய மொழியிலிருந்து கவிதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார்
இவரது கவிதைகளின் சிறப்பாக நான் உணருவது அன்றாட வாழ்க்கையிலிருந்து அபூர்வமான தருணங்களை, நிலைகளை உருவாக்கிக் காடுடுவதாகும். சமையலறையில் ஒருவன் கடவுளுடன் உரையாடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதில் சமையலறை என்பது முக்கியமானது. அது ஒரு குறியீடு. கடவுள் பசியற்றவர். நித்யமானவர். அவரது உலகில் சமையலறை கிடையாது. மனிதர்களின் முக்கிய இடம் சமையலறை. அது இல்லாத வீடே கிடையாது. சமைப்பது என்பது வெறும் உணவு தயாரிப்பது மட்டுல்லை. அது ஒரு மனநிலையின் வெளிப்பாடு. அங்கே சலிப்புறும் ஒருவன் கடவுளுடன் உரையாடுகிறா.
இன்னொரு கவிதையில் வீடற்ற கவிஞன் சொற்களால் ஒரு வீட்டினை கட்டுகிறான். கனவுத்திரைப் போல மெல்லிய பனிமூட்டமான சூழல் அவரது கவிதைகளில் காணப்படுகிறது. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். ஆக்டோவியா பாஸின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரது பாதிப்பினை இவரது கவிதைகளில் காணமுடிகிறது.
பீட்டர் செமோலிக் கவிதைகளை வாசித்த ஆர்வத்தின் காரணமாக ஸ்லோவேனிய சமகால இலக்கியங்களைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். மிகச்சிறப்பாக எழுதுகிறார்கள். ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமான அளவிற்கு வேறு இலக்கியங்கள் அறிமுகமாகவில்லை. ஆனால் அவசியம் அறிமுகம் செய்யப்பட வேண்டிய படைப்புகள் ஸ்லோவேனிய இலக்கியத்தில் நிறையவே இருக்கின்றன.
குறிப்பாகத் தத்துவாதியும் லக்கானிய சிந்தனையாளருமான Slavoj Žižek, மிக முக்கியமானவர். இவரது Zizek’s Jokes: Did You Hear the One about Hegel and Negation? என்ற கம்யூனிசம் மற்றும் கிறிஸ்துவம் குறித்துப் பேசப்படும் நகைச்சுவைகள் குறித்த ஆய்வு மிகச்சிறப்பானது. இந்த நூலில் அந்த ஜோக்குகளின் பின்னுள்ள மனநிலையை, நுண்அரசியலை அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
A man believes that he is a grain of seed. He is taken to a mental institution where the doctors finally convince him that he is not a grain of seed, but a man. No sooner has he left the hospital but he comes back very scared, claiming that there is a chicken outside the door and that he is afraid that the chicken will eat him. ‘Dear fellow’, says the doctor, ‘you know very well that you are not a grain of seed but a man’. ‘Of course I know that’, replies the patient,
‘but does the chicken?’
•••
The meaning of a scene can change entirely with the shift in the subjective point, as in a classic Soviet joke in which Brezhnev dies and is taken to Hell; however, since he was a great leader, he is given the privilege to be taken on a tour and select his room there. The guide
opens a door and Brezhnev sees Khruschev sitting on a sofa, passionately kissing and fondling Marilyn Monroe in his lap; he joyously exclaims: “I wouldn’t mind being in this room!” The guide snaps back: “Don’t be too eager, comrade! This is not the room in hell for Khruschev, but for Marilyn Monroe!”
Dane Zajc என்ற கவிஞரை ஸ்லோவேனிய இலக்கியத்தின் மிகச்சிறந்த கவிஞராகக் கூறுகிறார்கள்.
தனது கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது செமோலிக் தான் ஆரம்பக் காலங்களில் ஒசையால் ஈர்க்கபட்டதாகவும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிதைகள் எழுதியதாகவும் பின்பு சூழலை விவரிக்கும் விதமாகக் கவிதைகளை எழுதியதாகவும் தற்போது சமகாலப் பிரச்சனைகள். காதல் காமம் குறித்த கவிதைகளை எழுதுவதாகவும் சொல்கிறார். தனது கவிதைகள் உரைநடையினைப் போலத் தற்போது அமைகின்றன. அவை உலகின் வன்முறை துவங்கி அரசியல் வரை சகல விஷயங்களையும் பேசுகின்றன என்கிறார்
Peter Semolič poems
FATHER
Last night
I dreamt about you,
father.
You came
into my dream
as a deer
and stood astride
a grassy
mound.
I called you
by your name,
father.
I called you
by the word: father
I said:
Look,
my eyes are
two wet flowers
by the mountain
stream.
Come,
let your warm
deer tongue
dry the dew
that fell upon
my eyes.
And you stood
as in another
world,
as in another
dream,
on a mound,
overgrown with grass.
You shook your
mighty
antlers
and vanished in the white
cloud
of no one’s
dreams.
***
MESSAGE
One day in the future
the Earth will be peopled only by peasants.
They will drive around in horse carriages
and eat vegetables.
Animals will peacefully graze alongside white roads
or lie in the shade of poplars
and chew their cud.
In the evening, villagers will sit around
a white-haired artist
sinking deep into meditation.
Out of unimaginable distances,
he will send pictures into their consciousness,
more beautiful than the most beautiful poetry.
This is not utopia.
Young men will wear white clothes
similar to kimonos.
They will sit in the grass fields
and I, coming out of the nearby barn,
still drowsy from love,
will wave to them.
Then their death
will be more quiet than the death
of a leaf or a flower.
**
AN EVENING CHAT
Sometimes, if I am bored,
I talk to God. We examine
patterns in the linoleum together,
rhythmical repetitions
on the kitchen floor.
In these shapes, I say,
you can see a bear,
and in these a kitten,
and if you ignore the cap
on this funny chap
you get a lion’s head.
Awkwardly he repeats after me:
a bear, a cat . . .
And is utterly amazed whenever he finds
the same shape next to the sideboard
or beneath the window.
Can you see this line
cutting the floor in half?
What disharmony it brings into the images.
This here could be a bison,
but it turns out merely a deformed
horse’s back.
A bison, horse’s back . . .
He spells like a child at his primer,
enraged over a black crack
that cuts the kitchen floor in half.
I point forward, towards the door into the hallway,
where the monster zone begins,
the zone of fantastical creatures without heads,
horrible freaks without bodies.
Slowly I push him out,
after all, it is late and I would like to sleep.
But when I get up at night
to have a glass of water
he is still standing at the door,
staring into a thin line
that runs from the wall to the window
like someone
who is lost in a foreign city
and does not know the language
to ask the way.
**
An Icy Rain
Blessed are gods for their immortality?
I heard Achilles’ horses cry over Patroclus,
I saw the bloody rock with which Cain
killed Abel, my father and my brother –
they lied, turned into a stone, serene
as two gigantic pebbles on a riverbank.
An icy rain above Ljubljana and my face is already
pricked to the point of bleeding, tears from the wind in my eyes.
A language without tropes, a black-and-white drawing on paper
spanning even beyond the horizon, an infinite
repetition in mirrors placed opposite each
other – they will never die, that’s for sure,
but if something doesn’t die, has it ever lived at all?
The morning coffee is pleasantly warm and the girl who
walks by – and I’ve told myself not to write
about this anymore! – is truly beautiful: a red parka
on the background of snow melting more and more, disappearing.
**
poetry plays the same role in the life of human kind as the dreams play in the life of individual. எனக் கவிஞர் எர்னஸ்டோ சபடோ சொல்கிறார். தன்னைப் பொருத்தவரை கவிதை என்பது காமத்தை போன்றது. ரகசியமானது என்கிறார்
ஸ்லோவேனிய கவிஞர் மிலன் ரூபஸ் பற்றிக் கவிதையின் கையசைப்பு நூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஸ்லோவேனிய கவிதைகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அதையும் வாசிக்கலாம்.
Thanks ::
poetryinternational.org