நன்றி

எனக்குத் தாகூர் விருது கிடைத்துள்ளதற்கு நிறைய நண்பர்கள் போனிலும்  மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்தபடியே இருக்கிறார்கள்,

மூன்று நாளில் 1374 வாழ்த்து மின்னஞ்சல்கள் குவிந்துவிட்டதைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன், தங்களுக்கே இந்த விருதுகிடைத்துள்ளது போல உளமாற மகிழும் நல்ல உள்ளங்களோடு சேர்ந்து செயல்படுவது மிகுந்த சந்தோஷம் தருகிறது,

என்மீதும், என் எழுத்தின் மீதும் அன்பு கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

கடந்த ஒரு வாரகாலமாகவே பயணத்தில் இருந்த காரணத்தால் இணையத்தில் நேரம் செலவிட இயலவில்லை,

எனது விருதுச் செய்தியை ஒரே மின்னஞ்சல் மூலம் பலருக்கும் தெரியப்படுத்தியதால்  மறுமொழிகளை பலரும் தொடர்ந்து பெற்றுச் சிரமத்திற்கு உள்ளானதை அறிகிறேன்,

மகிழ்ச்சியின் உத்வேகத்தால் நடந்த இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோருகிறேன்,

தாகூர் இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு மும்பையில் மே 5ம் நாள் மாலை 5மணிக்கு ரபீந்திர நாட்டிய மந்திர், பிரபாதேவி, தாதர் மேற்கு, மும்பையில் நடைபெற உள்ளது,

இதற்காக நான் மே மாதம் ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை ( 5.5.11  to  8.05.11 )மும்பையில் இருக்கிறேன்,

எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள மும்பையில் வசிக்கும் நண்பர்கள், வாசகர்களைச் சந்திக்க விரும்புகிறேன்,

விருப்பமுள்ளவர்கள் ஐந்தாம் தேதிக்கு முன்பாக எனது மின்னஞசலில் தொடர்பு கொள்ளலாம்

அல்லது 09445191114ல் தொட்ர்பு கொள்க

••

0Shares
0