Month: May 2013

கொற்கையில் கடல் இல்லை

கொற்கைக்குப் போய் கொண்டிருந்தோம், என்னுடன் வந்து கொண்டிருந்த நண்பர் துளசிதாசன் கேட்டார் கொற்கையை நெருங்கிவிட்டோம் ஆனால் கடல் சப்தம் கேட்கவேயில்லையே அங்கே கடல் இல்லையே என்றேன் அது எப்படி, கொற்கை முத்துக்குப் பேர் போன கடற்துறைமுகம், அங்கே கடல் எப்படி இல்லாமல் போய்விட்டது என்று கேட்டார் கடல் பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்று சொன்னேன், கொற்கை என்ற பெயரைக்கேட்டவுடன் நம்மில் பலருக்கும் பழமையான துறைமுகமும் கடலும் தான் நினைவிற்கு வருகின்றன, ஆனால் இன்றுள்ள கொற்கையில் கடல் கிடையாது. மறப்போர் …

கொற்கையில் கடல் இல்லை Read More »

எதிர் கோணம்

சிறுகதை பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான், ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள்  அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய கூட்டமாக இருந்தது சவரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபடியே அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கேனான் கேமிரா, அது போன்ற கேமிரா ஒன்றை ஹிண்டு பேப்பர்  விளம்பரத்தில் …

எதிர் கோணம் Read More »

கூட்ஸ் பயணம்

எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது, பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன், அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம்,  ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள், இந்த உலகிலே மிகதனிமையானது …

கூட்ஸ் பயணம் Read More »

மார்க் ஷகாலின் ஆடு

மார்க் ஷகாலின் (Marc Chagall)  I and the Village  என்ற ஒவியத்தினை நியூ யார்க் ம்யூசியம் ஆப் மார்டன் ஆர்டில் பார்த்தபோது ஆஹா என்னவொரு அற்புதமான ஒவியம் என வியப்பு மேலோங்கியது, ஷகாலின் இந்த ஒவியத்தின் நகல்பிரதியை முன்பே கண்டிருக்கிறேன், ஆனால் அதற்கும், ஒரிஜினல் ஒவியத்தை நேரில் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை அன்று  என்னால் துல்லியமாக உணர முடிந்தது, பார்ப்பவர் எவரும் அந்த ஒவியத்திலிருந்த தலையை திருப்பமுடியாத, மாயக்கவர்ச்சியொன்று அவ்வோவியத்திலிருந்தது, அதன் முன்பாக நின்றபடியே …

மார்க் ஷகாலின் ஆடு Read More »

குழந்தைகள் சினிமா

நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது,  பொதுவாக  வெகுஜனத் திரைப்படங்களில் இடம் பெறும் குழந்தைகள் இரண்டுவிதமானவர்கள், ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப் பேசுகிறவர்கள், அர்த்தமற்றபடி பாட்டுபாடி ஆடுகின்றவர்கள், மற்றவர்கள் கைவிடப்பட்ட அநாதைகள்,  ஏழ்மையில் உழலும் பரிதாபமானவர்கள், ஒடிப்போனாவர்கள், குடும்ப பாரம் சுமப்பவர்கள், அவர்களின் கஷ்டமும் கண்ணீரும் வணிக திரைப்படங்களின் வியாபார உத்திக்கு சுவைகூட்டவே பயன்பட்டிருக்கிறது, டெம்பிளட் எனப்படும் வகைமாதிரிக்கு உட்பட்டே குழந்தைகள் திரைப்படங்களில் இடம் …

குழந்தைகள் சினிமா Read More »

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை

2007ல் வெளியான சிறுகதை, அமெரிக்காவில் வசிக்கும் எனது நண்பர்  ஆனந்த் விருப்பத்திற்காக இதை மீள்பதிவு செய்கிறேன் ••• ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் …

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை Read More »

பிபிஸ்ரீனிவாஸ் கடிதம்

P B ஸ்ரீனிவாஸ் அவர்கள் எனது சிறுகதை விரும்பி கேட்டவளை வாசித்துவிட்டு எனக்கு எழுதிய பாராட்டு கடிதம், இன்று காலையில் தற்செயலாக அதை எடுத்து வாசிக்கையில் மனம் கலங்கிவிட்டது, எங்க வீட்டுப் பெண்  படத்தில் பிபிஎஸ் பாடியுள்ள சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் ***

தெலுங்கில்

புத்தனாவது சுலபம் என்ற  எனது சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி, இக்கதை சித்ரா மே 2013 இதழில் வெளியாகி உள்ளது •••

ராமநாதபுரத்தில்

வருகின்ற 05.05.2013 ஞாயிறு காலை ராமநாதபுரம் தமிழ்சங்க நிறுவனர் டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன், விழா நடைபெறும் இடம் ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மஹால் வெளிப்பட்டணம், ராமநாதபுரம் நேரம் : காலை பத்துமணி நாள் : மே 5 ஞாயிறு ••••

தூய வெளிச்சம்

– சிறுகதை கோச்சடை சாலையில் நின்றபடியே வீடு இடிக்கபடுகின்றதை பார்த்துக் கொண்டிருந்தான், இடிபட மறுத்த உறுதியான சுவர்களை டங்டங் என கடப்பாரைகள் ஒங்கியோங்கி குத்தி உடைத்துக் கொண்டிருந்த ஒசை அவனை என்னவோ செய்தது, பழமையான அந்த வீடு  அவன் ஏறிக் குதித்து திருடிய வீடுகளில் ஒன்று, இரண்டுநாட்களாகவே அந்த வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்பொருள் அங்காடி ஒன்று வரப்போவதாக சொல்லிக் கொண்டார்கள்,  அந்த வீடு சைகோன் குமாரசாமி பிள்ளையுடையது, கப்பல் ஏறி போய் வணிகம் செய்து பிழைத்த …

தூய வெளிச்சம் Read More »