2019 சிறந்த புத்தகங்கள் – 14

எழுதாப் பயணம்

ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்

லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

ஆட்டிசம் பாதிப்புக் கொண்ட கனி என்ற தனது மகனை வளர்ப்பதிலும் கல்வி நிலையத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதிலும் அவரது அன்னை லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பட்ட கஷ்டங்களையும் படிப்பினைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம்.

ஆங்கிலத்தில் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mothers Heart : How Suffering Refutes வாசித்தபோது கலங்கிப்போனேன்.

அதைவிடச் சிறப்பாகவே லக்ஷ்மி பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளிடம் காட்ட வேண்டிய பேரன்பை இந்த நூல் அழுத்தமாக முன்வைக்கிறது

கனி புக்ஸ் இதனை வெளியிட்டுள்ளார்கள்

••

0Shares
0