அ.திருவாசகம், எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி” நாவல் வாசித்தேன். எந்த மிகை உணர்ச்சியும் இல்லாமல் உண்மையான வார்த்தைகளால் நாவலை பதிவு செய்திருக்கிறார். கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த சம்பத் என்ற நண்பனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாக இருக்கிறான். அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்ட சம்பத்தின் சட்டையில் ஒரு சிவப்பு எறும்பு ஊர்ந்து போய் கொண்டிருந்ததையும், அதனை இனி தட்டி விடத் தேவையில்லை என அவன் மனைவி எண்ணுவது இரக்கத்தை ஏற்படுத்துகிறது. சம்பத்தின் மரணம், அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. அழகர் சிகரெட் பற்ற வைத்த கயிறு கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருப்பதை எண்ணி மனிதன் வாழ்வும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறதோ என அவன் மனதில் மெல்லிய பயம் ஏற்படுகிறது. சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு சொல்லப்படுகிறது. சம்பத்தின் மரணத்தின் போது, நீர்மாலை எடுத்து வருவதற்காக தெருவில் உள்ள அடி குழாயில் தண்ணீர் எடுக்க சம்பத்தின் …
உறுபசி Read More »