மூன்று கடல் தாண்டி.
மக்கள் தொலைக்காட்சியில் தினமும் மதியம் மூன்று மணிக்குச் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களைத் தமிழ் சப்டைட்டிலுடன் திரையிடுகிறார்கள். புகழ்பெற்ற ரஷ்யத் திரைப்படங்கள் இதில் ஒளிபரப்பாகியுள்ளன. சில படங்கள் பலமுறை திரையிடப்படுகின்றன. அப்படி ஒளிபரப்பான Journey Beyond Three Seas திரைப்படத்தைப் பார்த்தேன். இதே படத்தை முன்பு தூர்தர்ஷன் ஒளிபரப்பு ஒன்றில் பார்த்திருக்கிறேன். இப்படம் 1957 ல் “Pardesi” என்ற பெயரில் இந்தியில் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த குதிரை வர்த்தகரான அஃபனாசி நிகிதின் எழுதிய பயணக்குறிப்புகளை மையமாகக் கொண்டு …