டர்னரின் கடற்காட்சிகள்.
Mr Turner என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். பிரிட்டீஷ் ஒவியரான வில்லியம் டர்னர் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படமிது. 2014ல் வெளியான திரைப்படத்தை Mike Leigh இயக்கியிருக்கிறார். இப்படம் டர்னரின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது. குறிப்பாக அவரது கடைசி நாட்களை. டர்னரின் நிலக்காட்சி ஒவியங்கள் தனித்துவமானவை. குறிப்பாக கடல் சார்ந்த ஒவியங்கள் அவரது முத்திரை ஒவியங்களாகக் கருதப்படுகின்றன. The Slave Ship என்ற ஒவியத்தில் தான் எத்தனை நுட்பமான சித்தரிப்புகள். கடலின் சீற்றமும் …