ஒளி உண்டானது.
The current war என்ற ஹாலிவுட் திரைப்படத்தை பார்த்தேன். மின்சாரம் கண்டுபிடிக்கபட்ட காலத்தில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும், தொழிலதிபரான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் என்பவருக்கும் இடையில் நடந்த போட்டி மற்றும் பிரச்சனைகளை முன்வைத்து அமெரிக்கா எவ்வாறு மின்சார மயமாக்கப்பட்டது என்ற வரலாற்றை விவரிக்கிறது இந்தத் திரைப்படம் தனது கண்டுபிடிப்புகளின் உரிமைக்காக எடிசன் பல்வேறு முறை நீதிமன்றம் சென்று முறையிட்டு வென்றிருக்கிறார். 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமையை எடிசன் பெற்றிருந்தார். ஆனாலும் எடிசனின் கண்டுபிடிப்புகளில் எல்லாமும் வெற்றிபெறவில்லை. மின்சார பல்ப், போனோகிராப், …