குறுங்கதை 119 கனவுகளின் கணக்கெடுப்பு
அந்தத் தேசத்தில் முதன்முறையாக மக்கள் எவ்வளவு கனவு காணுகிறார்கள். என்ன கனவு காணுகிறார்கள் என்பதைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி அரசாங்க ஊழியர்கள் வீடு வீடாக வந்து விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் அந்த நாட்களில் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை தங்கள் கனவுகள் குறித்த கணக்கை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் அறிவிப்பு வெளியானது. கனவுகளை ஏன் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும் என ஒருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எத்தனை கனவு கண்டோம் …