மக்களாட்சியின் குரல்
1970ல் வெளியான Cromwell என்ற வரலாற்றுப்படத்தைப் பார்த்தேன் கென் ஹியூஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராம்வெலாக நடித்திருப்பவர் ரிச்சர்ட் ஹாரிஸ். மன்னர் சார்லஸாக நடித்திருப்பவர் அலெக் கின்னஸ், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்தவர் ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தின் மன்னராட்சி முறையை மாற்றி மக்களாட்சி முறையை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகக் கிராம்வெல் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, பிரிட்டீஷ் வரலாற்றுபடங்கள் …