விலகும் இருள்.
1947ல் வெளியான Calcutta என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். John Farrow இயக்கியது. மூன்று விமானிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. கொலை செய்யப்பட்ட நண்பனைப் பற்றிய விசாரணையை மேற்கொள்ளத் துவங்கும் நீல், எப்படி குற்றவுலகின் வலைப்பின்னலில் எப்படிச் சிக்கிக் கொள்கிறான் என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய காலகட்ட கதையிது. நீல் கார்டன் (ஆலன் லாட்), பில் கன்னிங்ஹாம் (ஜான் விட்னி) மற்றும் பிளேக் (வில்லியம் பெண்டிக்ஸ்) என்ற மூன்று அமெரிக்க விமானிகள் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் பறந்து …