காந்தியின் நிழலில் -3 சந்தேகத்திற்கு அப்பால்
கனஸ்யாமதாஸ் பிர்லா எழுதிய காந்தி குறித்த நூல் பாபூ அல்லது நான் அறிந்த காந்தி என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. அதன் முன்னுரையில் காந்தியை நான் அறிந்து கொள்ளத்துவங்கிய போது திலகருக்கு நிகராக அவருக்கும் பெயரும் புகழும் வருகிறதே என அவரைச் சந்தேகித்துக் குறைகளை அறிந்து கொள்வதற்காகவே பழகத் துவங்கினேன். ஆனால் அந்த நட்பு மிக ஆழமானதாக உருவெடுத்துவிட்டது என்கிறார் காந்தியைச் சந்தேகிப்பவர்கள், குறைகளைக் கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்ய விரும்புகிறவர்கள் எப்போதுமிருக்கிறார்கள். அவர்கள் காந்தியை அறியும் …