ஒரு தேவதைக் கதை
சத்யஜித்ரேயின் சாருலதா படத்தில் நடித்த மாதவி முகர்ஜி பற்றி கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள இந்தப் பதிவு மிக முக்கியமானது. அவரது இணையதளத்திலிருந்து இதைப் பகிர்ந்து கொடுக்கிறேன் •• ஒரு தேவதைக் கதை கவிஞர் சுகுமாரன். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா சென்றிருந்தேன். தொழில் நிமித்தமான பயணம். ஆனால் அதற்கு மறைமுகமாக கலை நோக்கம் ஒன்றும் இருந்தது. என் அபிமானத்துக்குரிய இருவரைச் சந்திப்பதையும் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருந்தேன். ஒருவர் சத்யஜித் ராய். மற்றவர் மாதவி முகர்ஜி. கோவையில் …