காலைக்குறிப்புகள் -3 மணலின் விதி
Collection of Sand என்ற கட்டுரைத் தொகுப்பில் இதாலோ கால்வினோ விசித்திரமான பழக்கம் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பெண் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருந்து பிடி மண் அள்ளிக் கொண்டுவந்து அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டுப் பாதுகாத்து வைப்பது வழக்கம். அந்த ஜாடியின் வெளியே அது எந்த ஊரில் எடுக்கப்பட்ட மண் என்று எழுதி வைத்துக் கொள்வார். இப்படி அவர் சேகரித்தவற்றை ஒரு முறை கண்காட்சியில் வைத்திருக்கிறார். அதைப் பார்வையிட்ட கால்வினோ …