காலைக்குறிப்புகள் 5 எழுத்தில் பறப்பது.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி தனது நேர்காணல் ஒன்றில் அறிவியல் புனைவுகளுக்குத் தத்துவமே அடிப்படையானது. பிளேட்டோ தான் உலகின் முதல் அறிவியல் புனைவு எழுத்தாளர். மனிதர்களின் லட்சிய வாழ்க்கையைப் பற்றி அவர் கண்ட கனவு தான் இன்றும் அறிவியல் புனைவின் அடிப்படையாக உள்ளது. உண்மையில் பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்குகிறோம். அந்தக் கற்பனையான பறத்தலிலிருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது. எழுத்தாளன் சொற்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை. விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு …