காலைக்குறிப்புகள் 7 ஆயிரம் நன்றிகள்
யாசுனாரி கவாபத்தா Thank You என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பேருந்து ஒட்டுநர் தன்னைக் கடந்து செல்லும் குதிரைவண்டிகள், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுகிறார். உண்மையான மகிழ்ச்சியோடு அவன் தனக்காக வழிவிடும் அத்தனை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்லுகிறார். மலைப்பாதையில் செல்லும் அந்தப் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் பயணம் செய்கிறாள். பேருந்து பயணத்தின் வழியே ஒட்டுநரின் அகம் முழுமையாக வெளிப்படுகிறது. சாலையில் செல்லும் குதிரைகளுக்குத் தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்தக்கூடும் என்பதால் …