சிரிக்க மறந்த ஜோஹன்.
1967ம் ஆண்டு வெளியான The 25th Hour என்ற படத்தினைப் பார்த்தேன். ஹென்றி வெர்னுவில் இயக்கிய படம். ருமேனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் தேவாலயத்தில் ஜோஹன் மோரிட்ஸின் குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்து வைக்கப்படுகிறது. தம்பதிகள் குழந்தையோடு வீடு திரும்புகிறார்கள். வீட்டின் வெளியே விருந்து நடக்கிறது. ரேடியோவில் இனிமையான சங்கீதம் கேட்டபடியே குழந்தை தொட்டிலில் உறங்குகிறது. திடீரென ரேடியோவில் ஹிட்லர் பேசத்துவங்குகிறார். குழந்தை திடுக்கிட்டு அழுது கத்துகிறது. அப்போது தான் ஜோஹன் முதன்முறையாக ஹிட்லரின் பேச்சைக் கேட்கிறான். …