Month: August 2020

சிரிக்க மறந்த ஜோஹன்.

1967ம் ஆண்டு வெளியான The 25th Hour என்ற படத்தினைப் பார்த்தேன். ஹென்றி வெர்னுவில் இயக்கிய படம். ருமேனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் தேவாலயத்தில் ஜோஹன் மோரிட்ஸின் குழந்தைக்கு ஞானஸ்நானம்  செய்து வைக்கப்படுகிறது. தம்பதிகள் குழந்தையோடு வீடு திரும்புகிறார்கள். வீட்டின் வெளியே விருந்து நடக்கிறது. ரேடியோவில் இனிமையான சங்கீதம் கேட்டபடியே குழந்தை தொட்டிலில் உறங்குகிறது. திடீரென ரேடியோவில் ஹிட்லர் பேசத்துவங்குகிறார். குழந்தை திடுக்கிட்டு அழுது கத்துகிறது. அப்போது தான் ஜோஹன் முதன்முறையாக ஹிட்லரின் பேச்சைக் கேட்கிறான். …

சிரிக்க மறந்த ஜோஹன். Read More »

நாதஸ்வர ஓசையிலே

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. பூவும் பொட்டும் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கோவர்த்தனம். பாடல் படமாக்கப்பட்டவிதம் அத்தனை சிறப்பாகயில்லை. படமும் சுமாரே. கண்ணதாசன் எழுதிய பாடல் TMS மற்றும் P.சுசிலா இனிமையான குரல் கொடுத்துப் பாடியிருக்கிறார்கள். 1968-இல் பூவும் பொட்டும் வெளிவந்தது இந்தப் பாடல் ரேடியோவில் கேட்டுக் கேட்டு மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. எப்போதும் இந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினாலும் மறுநிமிசம் மனது …

நாதஸ்வர ஓசையிலே Read More »

அஞ்சலி.

பேரன்பு மிக்க நண்பரும் இடதுசாரி இயக்கத்தின் முக்கியத் தலைவருமான டி.லட்சுமணன் நேற்றிரவு காலமானார். தோழர் டி.எல் என்று அழைக்கப்பட்ட டி.லட்சுமணன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். கால்நடை ஆய்வாளராக அரசுப்பணியிலிருந்தவர் டி.லட்சுமணன். தமிழக அரசு ஊழியர் சங்கத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். மாற்றுத்திறனாளிக்கான அமைப்பின் தலைவராகச் செயல்பட்டவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையினை மேற்கொண்டு வந்த அற்புதமான மனிதர் அன்பு காட்டுவதில் டி.எல் அவர்களுக்கு நிகரே கிடையாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக …

அஞ்சலி. Read More »

கல்பற்றா நாராயணன்

இணையத்தில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை என்று கல்பற்றா நாராயணன் கவிதை ஒன்றை நண்பர் முரளி அனுப்பியிருந்தார். மிகவும் அற்புதமான கவிதை. பிறந்தநாளைப் பற்றிய மனப்பிம்பத்தை ஒரு நொடியில் கவிதை மாற்றிவிடுகிறது. பிறந்தநாளில் விரல்களுக்கும் வயதாகுமா எனச் சிறுமி கேட்பது அபாரம்.  முல்லா கதை ஒன்றில்  தனது தலைமுடிக்குத் தன்னை விட வயது அதிகம் என்று சொல்லுவார் முல்லா. அது இக்கவிதையை வாசிக்கையில் நினைவில் வந்து போனது.  கல்பற்றா மலையாளத்தின் மிக முக்கிய கவிஞர். அவரது சுமித்ரா என்ற …

கல்பற்றா நாராயணன் Read More »

காலைக்குறிப்புகள் 7 ஆயிரம் நன்றிகள்

யாசுனாரி கவாபத்தா Thank You என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பேருந்து ஒட்டுநர் தன்னைக் கடந்து செல்லும் குதிரைவண்டிகள், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுகிறார். உண்மையான மகிழ்ச்சியோடு அவன் தனக்காக வழிவிடும் அத்தனை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்லுகிறார். மலைப்பாதையில் செல்லும் அந்தப் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் பயணம் செய்கிறாள். பேருந்து பயணத்தின் வழியே ஒட்டுநரின் அகம் முழுமையாக வெளிப்படுகிறது. சாலையில் செல்லும் குதிரைகளுக்குத் தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்தக்கூடும் என்பதால் …

காலைக்குறிப்புகள் 7 ஆயிரம் நன்றிகள் Read More »

புத்தகமெனும் புதையல்.

நியூயார்க்கில் நடைபெறும் அரிய புத்தகங்களுக்கான கண்காட்சியினைப் பற்றிய ஆவணப்படம் The Booksellers. . அரிய புத்தகங்களை விற்பனை செய்பவர்கள். அவர்களின் வாடிக்கையாளர்கள். இந்தப் புத்தகங்களுக்குச் சந்தையிலுள்ள மதிப்பு பற்றி விரிவாக ஆராய்கிறது ஆவணப்படம். தமிழில் முதற்பதிப்பினை சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சியே கிடையாது. அரிய நூல்கள் கவனமின்றி வீசி எறியப்பட்டுக் காலத்தில் மறைந்து போய்விட்டன. ஆனால் சர்வதேசச் சந்தையில் நூற்றாண்டுகளைக் கடந்த புத்தகங்களின் மதிப்பு மிகவும் அதிகம். உம்பர்தோ ஈகோ இப்படி அரிய நூல்களைச் சேகரிக்கக் கூடிய ஒரு …

புத்தகமெனும் புதையல். Read More »

வண்ணதாசன் 75

தமிழின் மகத்தான படைப்பாளி வண்ணதாசனின் 75 வது பிறந்த நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலைக்குறிப்புகள் 6 மொழியே அடையாளம்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஸ் சிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதியவர். இவரது நோபல் பரிசு ஏற்புரையில் தனது மொழியைப் பற்றிச் சிங்கர் இப்படிக் குறிப்பிடுகிறார். ” language of exile, without a land, without frontiers, not supported by any government, a language which possesses no words for weapons, ammunition, military exercises” இட்டிஷ் இறந்து போன மொழியாகக் கருதப்படுகிறது. இறந்தவர்களின் கதையை எழுதுவதற்கு இறந்து போனதாகச் …

காலைக்குறிப்புகள் 6 மொழியே அடையாளம். Read More »

காலைக்குறிப்புகள் 5 எழுத்தில் பறப்பது.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி தனது நேர்காணல் ஒன்றில் அறிவியல் புனைவுகளுக்குத் தத்துவமே அடிப்படையானது. பிளேட்டோ தான் உலகின் முதல் அறிவியல் புனைவு எழுத்தாளர். மனிதர்களின் லட்சிய வாழ்க்கையைப் பற்றி அவர் கண்ட கனவு தான் இன்றும் அறிவியல் புனைவின் அடிப்படையாக உள்ளது. உண்மையில் பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்குகிறோம். அந்தக் கற்பனையான பறத்தலிலிருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது. எழுத்தாளன் சொற்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை. விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு …

காலைக்குறிப்புகள் 5 எழுத்தில் பறப்பது. Read More »

டோரா ஜெயிக்கிறான்

குத்துச்சண்டை போட்டியினை எப்படி ஒரு சூதாக மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றிய படம் The Harder They Fall. மார்க் ராப்சன் இயக்கியுள்ளார். போகார்ட் நடித்த கடைசிப்படம். திறமையில்லாத ஒரு குத்துச்சண்டை வீரனை மீடியா எவ்வாறு திட்டமிட்டு நாக் அவுட் நாயகனாக உருவாக்குகிறது என்பதே படத்தின் மையக்கதை. 1956ல் வெளியான திரைப்படம். ஹம்ப்ரி போகார்ட் எடியாக நடித்திருக்கிறார். புட் ஷுல்பெர்க்கின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர் எடி வில்லிஸ்ஸைத் தேடி ஒரு நாள் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு …

டோரா ஜெயிக்கிறான் Read More »