Month: September 2020

பொம்மலாட்டம்.

உதய்பூர் போயிருந்த போது ராஜஸ்தானின் பாரம்பரிய பொம்மலாட்டத்தைப் பார்த்தேன். உதய்பூரில் நாட்டுப்புறக்கலைகளுக்கான கலைக்கூடம் ஒன்றை அரசே உருவாக்கியுள்ளது. ராஜஸ்தான் முழுவதுமே இது போன்ற நாட்டுப்புறக்கலை மையங்கள் செயல்படுகின்றன. இங்கே தினமும் மாலை நேரம் ஆடல் பாடல் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு இதனால் நிரந்தர வருவாய் கிடைக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர் வி.. ரமணி பாவைக்கூத்துக் கலைஞர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் இயக்கிய போது அவருடன் பொம்மலாட்டக்கலைஞர்களைச் சந்திக்க உடன் சென்றிருந்தேன். தமிழகத்தில் அவர்களின் …

பொம்மலாட்டம். Read More »

துருபத்

ஹிந்துஸ்தானி இசையின் துருபத் குறித்த இயக்குநர் மணிகௌலின் மிக முக்கியமான படைப்பு. இதைக் காணும் போது மெய்மறந்து போய்விடுகிறது பரவசமூட்டும் அனுபவம் தரும் மிகச்சிறந்த ஆவணப்படம்.. பிலிம் டிவிசன் தயாரிப்பில் உருவானது. இணைப்பு: https://youtu.be/Lye2FSx0F4c

காலைக்குறிப்புகள் 18 சிறிய கதை

இயக்குநர் மணிகௌல் ஒரு நேர்காணலில் தனது படங்களுக்குச் சிறிய கதை போதுமானது. பெரிய கதையும் நிறையக் கதாபாத்திரங்களும் சிலருக்கே தேவைப்படுகின்றன என்கிறார். Uski Roti (1970) Duvidha போன்ற அவரது படங்களே இதற்கு உதாரணம். இதையே தான் ஹெமிங்வே சிறுகதை பற்றிய குறிப்பு ஒன்றில் வெளிப்படுத்துகிறார். குறைவான கதாபாத்திரங்கள். ஒரு சம்பவம் ஒரு நல்ல சிறுகதைக்குப் போதும். கதையின் ஆழம் தான் முக்கியமானது என்கிறார். இதற்குச் சிறந்த உதாரணம் அவரது Killers என்ற சிறுகதை. சிகாகோவைச் சேர்ந்த …

காலைக்குறிப்புகள் 18 சிறிய கதை Read More »

காகமும் நரியும்.

நாம் இன்று வரை சிறுவர்களுக்குச் சொல்லி வரும் பாட்டியிடமிருந்து வடையைத் திருடும் காகம் கதை நம்முடையதல்ல. ஒன்றாம் நூற்றாண்டில் ஈசாப் சொன்ன கதையது. இந்தக் கதையின் வரலாற்றைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். நேற்று இணையத்தில் இந்தக் கதையினை விவரிக்கும் ஓவியங்கள் சிலவற்றைப் பார்த்தேன். இக்கதை ஈசாப் சொல்வதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் புழங்கியது என்கிறார்கள். அப்போது கதையில் காகம் வடை எதையும் திருடவில்லை. அதன் வாயில் இருப்பது வெண்ணெய் துண்டு. அதையே நரி ஏமாற்றி வாங்க முயல்கிறது. …

காகமும் நரியும். Read More »

சுந்தர ராமசாமி ஆவணப்படம்.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறித்த அரிய ஆவணப்படம் ஒன்றை ஆர்.வி.ரமணி இயக்கியுள்ளார். நீ யார் என்ற இந்த ஆவணப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் அரிய நேர்காணல், உரை, மற்றும் அவர் படைப்புகள் குறித்த பார்வைகள், அவரது இறுதி நாட்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. சிறப்பான ஆவணப்படம். Nee Yaar? (Who are You?) Directed by RV Ramani | 2008 இணைப்பு https://youtu.be/a1wxroOZYxQ

காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன்

800 முதல் 600 B C வரையிலான பண்டைய சீன பாடல்களின் தொகுப்பு The Book of Songs. இந்த நூலை வாசிக்கையில் சீனாவில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பாடல்களும் இசையும் கலந்திருப்பதை அறிய முடிகிறது. தமிழின் சங்க கவிதைகளைப் போலவே இயற்கையைப் புகழ்ந்துபாடும் இந்தக் கவிதைகள் சீனப்பண்பாட்டின் பொக்கிஷமாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளைப் போலவே சீனக் கவிதைகளுக்கும் ஒரு நீண்ட மரபிருக்கிறது. டாங் மன்னரின் வம்சம் ஆட்சி செய்த காலமே …

காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன் Read More »

காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்

தபால்காரரை எதிர்பார்த்து எழுத்தாளர்கள் காத்திருப்பது குறித்து எழுத்தாளர் ஜான் பிரைன்  எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். பாப்லோ நெரூதாவிற்கு வரும் தபால்களைக் கொண்டு வருவதற்கென்றே தனியே ஒரு தபால்காரர் இருந்தார். தினமும் நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருவது வழக்கம். அதில் பாதிக் காதல் கடிதங்கள். விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார். அவரது கையிலுள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்தப் போகின்றன என்று அவருக்குத் தெரியும். உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர். அதே …

காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன் Read More »

கங்கா தின்

ருடியார்ட் கிப்ளிங்கின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டபடம் கங்கா தின் (Gunga Din). ஜார்ஜ் ஸ்டீவன்ஸ் இயக்கிய இந்தப்படத்தில் கேரி கிராண்ட், விக்டர் மெக்லாக்லன் மற்றும் டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் ஜூனியர் ஆகியோர் நடித்துள்ளனர். 1939 ஆம் ஆண்டு வெளியானது. Sam Jaffe கங்கா தினாக நடித்திருக்கிறார். 1830 களில் இந்தியாவில் தக்கீ(Thuggee) எனப்படும் வழிப்பறிக் கொள்ளையர்கள் செயல்பட்டனர். வணிகர்களுடன் இணைந்து பயணித்து அவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்று புதைத்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் இந்தத் தக்கீகள். காளியின் புதல்வர்களாகத் …

கங்கா தின் Read More »

கிம்மின் சாகசங்கள்.

இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை படங்கள் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்திரத்தையே முன்வைக்கின்றன. பிரிட்டிஷ் படங்களில் இந்தியாவினை ஆண்ட வெள்ளைக்காரர்களின் பெருமை மற்றும் சாகசங்கள் வியந்து போற்றப்படுகின்றன. ஹாலிவுட் படங்களிலும் இந்தியா என்பது காடுகளும் வனவிலங்கும் சாமியார்களும் ஏமாற்றுக்காரர்களும் கொண்ட ஒரு தேசம். அந்தத் தேசத்தை நல்வழிப்படுத்த வெள்ளைக்காரர்கள் மிகவும் கஷ்டப்பட்டார் என்ற பிம்பமே முன்னெடுக்கப்படுகிறது. பிரெஞ்சு இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவைப் பற்றிய படங்களே இந்தியாவின் உண்மையான முகத்தை …

கிம்மின் சாகசங்கள். Read More »

வாழ்த்துகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி. ராஜநாராயணனின் 98-ஆவது பிறந்த நாளுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கிராவிற்கு ஞானபீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன். இணைப்பு : https://youtu.be/fc_cLDMuYyc