Month: September 2020

காலைக்குறிப்புகள் 13 நாவலின் வழி தேடுதல்

நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலில் ரூத் ஸ்வைன் என்ற படுக்கையில் கிடக்கும் பெண் கதைகளுக்குள்ளாகத் தனது தந்தையைத் தேடுகிறாள். நாம் ஒவ்வொருவரும் ஒரு நீண்ட கதையே என்கிறது இந்த நாவல். We are our stories. We tell them to stay alive or keep alive என்றே நாவல் துவங்குகிறது. இளமையிலே நோயுற்ற ரூத் ஸ்வைன் படுக்கையிலே கிடக்கிறாள். சுற்றிலும் புத்தகங்கள். கதைகளுக்குள் தனது தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க …

காலைக்குறிப்புகள் 13 நாவலின் வழி தேடுதல் Read More »

பினோக்கியோவின் மூக்கு.

சிறார் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள் யாவும் பயணத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டவையே. நார்னியா, லார்ட் ஆப் தி ரிங்ஸ், ஆலீஸின் அற்புத உலகம், குட்டி இளவரசன், ஹாரி போட்டர், தி விசர்ட் ஒப் ஒஸ் என யாவும் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் சாகசப்பயணத்தையே முதன்மைப்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறது. மரப்பொம்மையான பினோக்கியோவின் கதையும்ஒரு  சாகசப்பயணமே. இத்தாலிய எழுத்தாளரான கார்லோ கொலாடி எழுதிய இந்த நூல் 1883ல் வெளியானது. நூற்றாண்டினைக் கடந்து இன்றும் தொடர்ந்து விற்பனையில் சாதனை புரிந்து வருகிறது. சினிமா, நாடகம். …

பினோக்கியோவின் மூக்கு. Read More »

பர்மா வழிநடைப்பயணம்.

தொலைக்காட்சியில் பராசக்தி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் பர்மாவிலிருந்து அகதியாக வந்தவர்களுக்கான முகாமில் பதிவு செய்வதற்காக எஸ்.எஸ்.ஆர் காத்துக் கொண்டிருப்பார். அவருக்கு முன்பாக இரண்டு பேர்களின் ஊர் விபரங்கள் பதிவு செய்வதைக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விபரமும் தெரியாது. சிபாரிசின் பெயரில் ஒருவரை முகாமில் சேர்த்துக் கொள்கிறான் முகாம் பொறுப்பாளர். ஊன்று கோலுடன் நிற்கும் எஸ். எஸ். ஆருக்கு முகாமில் இடமில்லை என்று விரட்டியடிப்பார் பொறுப்பாளர். அதற்கு எஸ்.எஸ். ஆர் உயிர் தப்பி நடந்தே பர்மாவிலிருந்து …

பர்மா வழிநடைப்பயணம். Read More »

காலைக்குறிப்புகள் 12 ஜூலியன் பார்ன்ஸின் கிளி

எழுத்தாளர் ஜூலியன் பார்ன்ஸின் அப்பா அம்மா இருவரும் பிரெஞ்சு ஆசிரியர்கள். அம்மாவின் பூர்வீகம் பிரான்ஸ். பிரிட்டனில் வசித்த போதும் அவர்கள் மனதிலிருந்தது பிரெஞ்சு தேசமும் அதன் பண்பாடுமே. வீட்டில் பிரெஞசு பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ஜூலியன் பார்ன்ஸ் பள்ளியில் பிரெஞ்சு மொழி பயின்றார். விடுமுறைக் காலத்தினைக் கழிக்கப் பிரான்ஸ் போவது அவரது வழக்கம். பெரிய நகரங்களை விடவும் பிரான்சின் கிராமப்புறங்களைத் தான் மிகவும் நேசிப்பதாகக் கூறும் ஜூலியன் பார்ன்ஸ் பிரெஞ்சு இலக்கியத்தின் ஒப்பற்ற படைப்பாளியான குஸ்தாவ் …

காலைக்குறிப்புகள் 12 ஜூலியன் பார்ன்ஸின் கிளி Read More »

மதராஸ் டிராம்வே

மதராஸில் ஒடிய டிராம் பற்றிய அந்தக் காலப் பதிவுகள் •• டிராமில் அதிகக் கூட்டம்! இப்போது ஊர் கெட்டுக்கிடக்கிற கிடையில் டிராம் காரர்கள் கொஞ்சம் இருக்கிற ஸ்திதியைக் கவனித்து நடந்தால் நலமாகும். தினந்தோறும் காலை, மாலைகளில் ஒரு   வரை யறையின்றி ஜனங்களை ஏற்றுகிறார்கள். இப்படிச் செய்வதினால் அசுத்தம் ஜாஸ்திப்படுவதுடன் தொத்து வியாதியும் விருத்தியாக இடமாகும். ஆகையால் அதிகக் கூட்டம் அடையாமல் பார்க்கவேண்டும். – ‘சுதேசமித்திரன்’ உபதலையங்கம் 1898 ஆகஸ்ட் 27 பக்கம் – 4. **** டிராம்வேயில் …

மதராஸ் டிராம்வே Read More »

சைக்கிள் கமலத்தின் தங்கை- விமர்சனம்.

–MJV எஸ்.ரா அவர்களின் புத்தகத்தைக் கையில் எடுப்பதற்கு முன்பாகவே ஒரு சிறு பரபரப்பு எப்போதும் ஒட்டிக் கொள்வதைத் தடுக்க முடிவதில்லை. அது போன்றதொரு நிலை தான் இந்தச் சைக்கிள் கமலத்தின் தங்கை என்ற சிறுகதை தொகுப்பிற்கும் இருந்தது. சில முறை யோசிப்பதுண்டு, வேகமாக நம்மைத் தன் உலகத்தில் இழுத்து சென்று, இருத்திக் கொள்ளவும் செய்யும் புத்தகங்கள் என்ன வகையாக இருக்கும் என்று! அந்த வரிசையில் இந்தத் தொகுப்பையும் மிக விரைவில் வாசித்து முடித்தாயிற்று. கோயிந்துவும் திலிப்குமாரும், அருணகிரியும் …

சைக்கிள் கமலத்தின் தங்கை- விமர்சனம். Read More »

காலைக்குறிப்புகள்-11 சந்தோஷமான குடும்பம்.

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.” என டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலின் முதல்வரி உள்ளது. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளரான உர்சுலா லெ குவின் தனது நேர்காணல் ஒன்றில் இந்த வரியை மறுத்து நாவலின் அழகான முதல்வரி என்பதற்கு மேல் இதற்கு மதிப்பில்லை என்கிறார். சந்தோஷமான குடும்பங்கள் யாவும் ஒன்று போல இருக்கின்றன என்பது கற்பனை. எந்த இரண்டு சந்தோஷமான குடும்பங்களும் ஒன்று போல …

காலைக்குறிப்புகள்-11 சந்தோஷமான குடும்பம். Read More »

பால்ய காலத்துச் சித்திரங்கள்

–பதின் நாவல் குறித்த விமர்சனம் கீரனூர் ஜாகிர்ராஜா •• இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்காத பால்ய காலத்தை ஏக்கத்தோடு அசைபோட்டபடிதான் பலரும் நடமாடுகிறோம். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரும் சிருஷ்டிக்குத் தேவையான ஆதார சுருதியைத் தங்களின் இளம்பிராயத்து நினைவுகளிலிருந்தே கண்டடைகின்றனர். உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம் எனத் தீவிரமான நாவல்களை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணன் முற்றிலும் பால்ய கால நிகழ்வுகளை அடுக்கிக் கோத்து எழுதியிருக்கும் புதிய நாவல் ‘பதின்’. ‘இதில் வரும் ‘நான்’என்னைக் குறிக்கவில்லை; நம்மைக் குறிக்கிறது’ என்கிறார் …

பால்ய காலத்துச் சித்திரங்கள் Read More »

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

முனைவர் ம. இராமச்சந்திரன் உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவரின் பள்ளிப் படிப்பும் குடும்பச் சிக்கலும் யதார்த்த சமூகச் சூழலும் பிற்கால …

செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை Read More »

காலைக்குறிப்புகள்-10 தந்தைக்கு ஒரு கடிதம்.

தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தை, சகோதரன் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூலை வாசித்தேன். இதில் தனது 17 வயதில் தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  அந்தக் கடிதத்தில் உள்ள அவரது வரிகள் பின்னாளில் அவரது கதையின் குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது. ஒரு தந்தைக்கு மகன் இப்படிக் கடிதம் எழுதுவானா  என வியக்க வைக்கிறது. பிரான்ஸ் காஃப்கா தனது தந்தையின் கெடுபிடிகள் கட்டுப்பாடுகள் பற்றி ஒரு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதினார். ஆனால் …

காலைக்குறிப்புகள்-10 தந்தைக்கு ஒரு கடிதம். Read More »