Month: October 2020

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலிலிருந்த எழுத்தாளர்களில் எவரது புத்தகமாவது தமிழில் வந்திருக்கிறதா எனப் பார்த்தேன். ஒன்று கூட வெளியாகவில்லை. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் பேசப்பட்ட கவிதை, நாவல். சிறுகதை கட்டுரை தொகுப்புகள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று யோசித்தாலும் ஒன்றும் வெளியாகவில்லை. உரிமை பெற்றுத் தமிழில் வெளியிடுவது என்பது பெரிய முயற்சி. நிறையப் பொருட்செலவு கொண்டது என்கிறார்கள். அது உண்மையே. மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகங்களே கூட நோபல் பரிசு பெற்றுள்ள ஒன்றிரண்டு …

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். Read More »

சிறுமியின் கனவு.

தி ரிக்கார்டர் எக்ஸாம் என்ற கொரியப்படத்தைப் பார்த்தேன். 27 நிமிஷங்கள் ஓடும் அழகான திரைப்படம். 1988 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான யூன்-ஹீ என்ற  மாணவியின் ஆசையைப் பேசுகிறது. பள்ளியில் படிக்கும்  யூன்-ஹீ ஒரு நாள் ரிக்கார்டர் என்ற குழலிசைக் கருவியை வீட்டில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். தன் அம்மாவிற்குப் போன் செய்து அதைப் பள்ளியில் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்வதில் படம் துவங்குகிறது. பள்ளியில் குழலிசைத் தேர்வு நடைபெறவுள்ளது. அதில் …

சிறுமியின் கனவு. Read More »

ஆர்மேனியச் சிறுகதைகள்

ஆர்மேனியச் சிறுகதைகள் நூலை வல்லிக்கண்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மிகச்சிறந்தவை. இணையத்தில் தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/175-armeniyachchirukathaikal.pdf இந்தத் தொகுப்பிற்கு அசோகமித்ரன் எழுதியுள்ள முன்னுரை ஆர்மேனியர்களின் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து மிக நுட்பமாக விவரிக்கிறது. எவ்வளவு அரிய தகவல்கள். உண்மைகள். அசோகமித்ரனுக்கே உரித்தான நகைச்சுவை இதிலும் வெளிப்படுகிறது. அபூர்வமான முன்னுரையது. ••• “அவர்கள் என் ஜனங்களைக் கொல்கிறார்கள். அவர்கள் என் சகோதரர்களைக் கொன்று தள்ளுகிறார்கள். “ இலவசமாக முடிவெட்டிக்கொள்வதற்காகச் …

ஆர்மேனியச் சிறுகதைகள் Read More »

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி

“அந்தோ”! என்றது எலி, “ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரியதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காகப் பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்”. “நீ உன் திசையை மாற்றவேண்டிய …

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி Read More »

பூமாவின் கண்கள்

பூமா (PUMA) எனப்படும் மலைச்சிங்கத்தைப் பற்றிய Into the Puma Triangle டாமெண்டரியைப் பார்த்தேன். மலைச்சிங்கங்கள் மிகச் சக்திவாய்ந்த உடலமைப்பு கொண்டவை. மான்களை வேட்டையாடுவதில் திறமையானவை. சிலே நாட்டில் பூமாக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வனவிலங்குகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கேசி ஆண்டர்சன் மோன்டானாவில் பல ஆண்டுகளாகப் பூமாக்களைக் கண்காணித்து வருகிறார், ஆனால் அவரால் ஒருமுறை கூடப் பக்கத்தில் போய் பூமாவைக் காண முடிந்ததில்லை . ஆவணப்படத் தயாரிப்பாளர் ரெனே அழைப்பில் சிலே செல்லும் கேசி …

பூமாவின் கண்கள் Read More »

எழுத்தின் மொழி

சாகித்ய அகாதமி 2007ம் ஆண்டு முதல் பிரேம்சந்த் ஃபெலோஷிப்பை வழங்கி வருகிறது. சார்க் நாடுகளில் வாழும் ஒரு எழுத்தாளரைத் தேர்வு செய்து இந்த நல்கை அளிக்கிறார்கள். 2018ம் ஆண்டிற்கான பிரேம்சந்த் ஃபெலோஷிப் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியான ஐயாத்துரை சாந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆண்டு நான் சாகித்ய அகாதமி விருது பெற டெல்லி சென்றிருந்த போது சாந்தனைச் சந்தித்து உரையாடினேன். சென்னைக்கு அவர் வந்திருந்த போதும் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர். 50 …

எழுத்தின் மொழி Read More »

வாழ்த்துகள்

நேற்று பாரதப்பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பொன் மாரியப்பனை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அதிலும் தமிழிலே உரையாடியது மிகுந்த பாராட்டிற்குரியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத் தூத்துக்குடியில் முடிதிருத்தகம் வைத்திருக்கும் பொன் மாரியப்பன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது முடிதிருத்தகத்தில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்திருப்பதாகவும். வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் அதை ஆர்வத்துடன் படிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரைப் பாராட்டி எனது இணையதளத்தில் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து பலரும் மாரியப்பனுடன் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். நேரில் சென்று வாழ்த்தைத் தெரிவித்தார்கள். …

வாழ்த்துகள் Read More »

ரில்கேயின் காதலி.

எழுத்தாளரும், முதல் பெண் மனோதத்துவ நிபுணருமான லூ ஆண்ட்ரியாஸ்- சலோமே கவிஞர் ரில்கேயின் காதலியாக இருந்தவர், தத்துவவாதியான நீட்சே இவரைத் தீவிரமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் சலோமே அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. லூ ஆண்ட்ரியாஸ்-சலோமே வாழ்க்கையை விவரிக்கும் Lou Andreas-Salomé என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஜெர்மானிய பெண் இயக்குநரான Cordula Kablitz-Post இயக்கியது. சர்வதேச திரைப்படவிழாவில் இத் திரைப்படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான விருதை கோர்டுலா கப்லிட்ஸ்-போஸ்ட் பெற்றிருக்கிறார் லூ ஆண்ட்ரியாஸ்-சலோமே படம், முதுமையில் …

ரில்கேயின் காதலி. Read More »

எமிலி டிக்கின்சனின் காதல்

கவிஞர் எமிலி டிக்கின்சன் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் Wild Nights with Emily என்ற படத்தைப் பார்த்தேன். மேடலின் ஓல்னெக் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படமிது A Quiet Passion என்ற ஒரு திரைப்படமும் எமிலியின் சுயசரிதையை மையமாகக் கொண்டதே. இரண்டிலும் அறியப்படாத எமிலியின் ரகசியக் காதலே முதன்மையாகப் பேசப்படுகிறது. தனது இருபதாம் பிறந்தநாளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், எமிலி டிக்கின்சன் முதன் முறையாகச் சூசன் கில்பர்ட்டை சந்தித்தார். சூசன் அவளை விட ஒன்பது நாட்கள் …

எமிலி டிக்கின்சனின் காதல் Read More »

ஒரே ஒரு ஊரிலே

மலையாளச் சிறுகதை பால் சக்கரியா தமிழில்: எம்.எஸ். ஒரே ஒரு ஊரிலே ஒரு வீட்டைச் சுற்றியிருந்த புல்வெளியின் ஒரு மூலையில் ஒரு மீன் குளம் இருந்தது. அதில் சில தவளைகளும் வசித்து வந்தன. தவளைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. காரணம், மழைக்காலங்களில் இரவு முழுதும் கலங்கிய நீரில் தாய்த் தவளைகள் அழுது அழுது இடும் முட்டைகளின் கரிய மாலைகளின் பெரும் பகுதியும் குளத்தில் வாழும் கொழுத்த மீன்களுக்கும், நீண்ட கம்புகள் ஏந்திய அந்த வீட்டுக் குழந்தைகளின் வேடிக்கைக்கும் …

ஒரே ஒரு ஊரிலே Read More »