இயற்கையின் குரல்
David Attenborough: A Life On Our Planet என்ற புதிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். வாழ்வில் சிலரைத் தான் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைப்பேன். அவர்களில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. உலகில் அவர் கால்படாத இடமேயில்லை. காடுகள் பனிமலைகள் குகைகள் பாலைவனம் என்று இந்தப் பூமியில் அவர் சுற்றித்திரியாத இடமேயில்லை. அவர் தயாரித்த புவிவாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள் மிகச்சிறப்பானவை. ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் …