வாழ்த்துகள்

நேற்று பாரதப்பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பொன் மாரியப்பனை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அதிலும் தமிழிலே உரையாடியது மிகுந்த பாராட்டிற்குரியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகத் தூத்துக்குடியில் முடிதிருத்தகம் வைத்திருக்கும் பொன் மாரியப்பன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது முடிதிருத்தகத்தில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்திருப்பதாகவும். வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரத்தில் அதை ஆர்வத்துடன் படிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரைப் பாராட்டி எனது இணையதளத்தில் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து பலரும் மாரியப்பனுடன் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். நேரில் சென்று வாழ்த்தைத் தெரிவித்தார்கள். …

வாழ்த்துகள் Read More »