நூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்
நூலகத்தின் அருகிலே அவரது மெக்கானிக் ஷாப் இருந்தது. மணி என்ற அந்த மெக்கானிக் அடிக்கடி நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அவர் புத்தகம் எடுத்துப் போவதைப் பார்க்கவில்லை. நூலகத்திலும் நாளிதழ் படிப்பதோ, வார இதழ்களைப் புரட்டுவதோ கிடையாது. பெரும்பாலும் மூலையில் உள்ள மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பார். மாலை நேரமாக இருந்தால் பேப்பர் படிக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பார். படிக்காமல் எதற்காக இப்படி நின்று கொண்டேயிருக்கிறார் என்று யோசித்திருக்கிறேன். ஒரு நாள் மணியிடம் எனது நண்பனின் …