நூலக மனிதர்கள் 8 பீம ரகசியம்
அந்தக் கான்ஸ்டபிள் யூனிபார்மில் தான் நூலகத்திற்கு வருவார். ஐம்பது வயதிருக்கும். பருத்த உடல். படியேறும் போது மூச்சுவாங்கும். மூட்டுவலியோடு அவர் படியேறி வந்தவுடன் நூலகர் முன்பாக உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொள்வார். அவராக ஒரு போதும் புத்தக அடுக்குகளுக்குச் செல்ல மாட்டார். கதை, கவிதை நாவல் போன்ற எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் போக மாட்டார். எப்போதும் சமையல் புத்தகம் மட்டுமே எடுத்துப் போவார். நிச்சயம் அது அவர் படிப்பதற்கான புத்தகமில்லை என்று தெரியும். விதவிதமான சமையல் முறைகளைப் …