நான்கு ஜன்னல்கள்.
இயக்குநர் சத்யஜித் ரேயின் மகன் சந்தீப் ரே இயக்கிய Chaar என்ற வங்கமொழிப்படத்தைப் பார்த்தேன். நான்கு சிறுகதைகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்ட படம். 2014ல் வெளியாகியிருக்கிறது. சத்யஜித் ரேயின் கடைசி மூன்று படங்களுக்குக் கேமிராமேனாகப் பணியாற்றியவர் சந்தீப்ரே. சிறந்த இசையமைப்பாளர். சத்யஜித்ரேயின் பெலுடா கதைகளைத் தொலைக்காட்சி தொடராக இயக்கியவர். Himghar, Uttoran, Professor Shonku O El Dorado, Double Feluda and Monchora. படங்களை இயக்கியவர். வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பரசுராம் மற்றும் சீர்சேந்து பந்தோபாத்யாவின் சிறுகதைகள் …