மறுக்கப்பட்டவனின் குரல்
அலெக்ஸி ஜெர்மன் இயக்கி 2018ல் வெளியான ரஷ்யத்திரைப்படம் Dovlatov . இந்தப்படம் எழுத்தாளர் செர்ஜி டோவ்லடோவ் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை விவரிக்கிறது. 1971 ஆம் ஆண்டில் லெனின்கிராட்டில் நடக்கும் கதையில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார். செர்ஜியின் படைப்புகளை எதையும் வெளியிட அன்றைய லியோனிட் ப்ரெஷ்நேவின் அரசு அனுமதி அளிக்கவில்லை. அந்த நாட்களில் படைப்புகளை அரசின் எழுத்தாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்ற சட்டமிருந்தது. அவர்களே …