எல்லை கடந்து.
17 நிமிஷங்கள் ஓடக்கூடிய குறும்படம் Nefta Football Club’ 2018ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Yves Piat. சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்களாக உள்ள இரண்டு சிறுவர்களைப் பற்றியதே கதை. சகோதரர்களான அவர்கள் துனிசிய கிராமத்தில் வசிக்கிறார்கள். ஒருநாள் அல்ஜீரியாவின் எல்லையில் பாலைவனத்தின் நடுவில் கைவிடப்பட்ட கழுதை ஒன்றைக் காணுகிறார்கள். அந்தக் கழுதை போதை மருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவது. கழுதையில் உள்ள …