அனோடியின் கால்பந்து
Two Half Times in Hell கால்பந்து விளையாட்டினை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக முக்கியமானது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். 1961ல் சோல்தான் ஃபாப்ரி இயக்கிய இந்தத் திரைப்படம் சினிமா வரலாற்றில் தனியிடம் பெற்றது. ஏப்ரல் 1944 ல் ஹிட்லரின் பிறந்த நாளை கொண்டாட, ஜெர்மனி ராணுவம் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடத்த விரும்புகிறது. ஜெர்மனி அணிக்கும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள போர் கைதிகளைக் கொண்ட அணிக்கும் இடையில் போட்டி ஏற்பாடு செய்கிறார்கள். இந்தப் போட்டி எவ்வாறு நடைபெற்றது …