நூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம்
நூலகங்களில் நடைபெறும் புத்தக அறிமுகக் கூட்டங்கள் எளிமையானவை. ஐம்பது பேருக்குள் தான் வருவார்கள். ஆனால் அக்கறையுடன் பேச்சைக் கவனிப்பார்கள். கேள்வி கேட்பார்கள். மேடை அலங்காரங்கள் கிடையாது. பொன்னாடை போட மாட்டார்கள். மைக் செட் வசதி கூட இருக்காது. ஆனால் அந்த கூட்டம் தரும் நெருக்கம் பெரிய மேடைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தந்ததில்லை. சிறுநகரங்களில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுவது மிகக் குறைவு. அதுவும் திருக்குறள், கம்பராமாயணம், தேவாரம் திருவாசகம் தவிர்த்து வேறு புத்தகங்களைப் பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறுவது அபூர்வமே. …