Month: November 2020

நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும்

நூலகத்திற்கு வந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பதற்காக ஒருவர் அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா ? பத்து நாட்களுக்கு ஒரு முறை அப்படி ஒரு பையன் அடிவாங்குவான். ஆவேசமாக நூலகத்திற்குள் வரும் அவனது மாமா அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கி வீசிவிட்டுக் கன்னத்தில் அறைவார். அடிவாங்கிய போதும் அவன் சலனமேயில்லாமல் உட்கார்ந்திருப்பான். ஒரு முறை அந்தப் பையன் அடிவாங்கிய போது நூலகத்திலிருந்த பலரும் அவனது மாமாவைக் கண்டித்தார்கள். ஆனால் அவரோ “வேலையைப் போட்டுட்டு இங்கே உட்கார்ந்து பொஸ்தகம் படிச்சிட்டு …

நூலக மனிதர்கள் 18 எல்லோர் கைகளுக்கும் Read More »

இணைந்த கரங்கள்.

Made in Bangladesh என்ற பங்களாதேஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். டாக்காவிலுள்ள ஆயுத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களின் அவல வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய ஆயுத்த ஆடை ஏற்றுமதியாளராகப் பங்களாதேஷ் விளங்குகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், பங்களாதேஷின் ஆயுத்த ஆடைத் தொழில் 19 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தை ஆயுத்த ஆடை வணிகம் பெறுகிறது. ஆயுத்த ஆடைத் தொழிலில் 4.4 …

இணைந்த கரங்கள். Read More »

புதிய நாவல்

( முகப்பு அட்டை தற்காலிகமானது.) இன்று லியோ டால்ஸ்டாய் நினைவு நாள் நவம்பர் 20, 1910 ல் டால்ஸ்டாய் தனது 82வது வயதில் மறைந்தார். தனது யஸ்னயா போல்யானா பண்ணையிலே டால்ஸ்டாய் புதைக்கபட்டார்.  அவருக்குக் கல்லறை அமைக்கபடவில்லை. புல்வெளியில் தான் அவரது புதைமேடு காணப்படுகிறது. ஏழை விவசாயி ஒருவனைப் போலவே தானும் புதைக்கப்பட வேண்டும் என்று டால்ஸ்டாய் விரும்பினார். ரஷ்ய இலக்கியங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் டால்ஸ்டாயை ஆழ்ந்து படித்திருக்கிறேன். அவர் பற்றிச் …

புதிய நாவல் Read More »

நூலக மனிதர்கள். 17 கனவின் முகம்

அந்த இளைஞருக்கு இருபது வயதிருக்கும். எப்போது நூலகத்திற்கு வரும் போதும் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு தான் வருவார். அதை நூலகத்தினுள்ளும் கழட்ட மாட்டார். அவர் தான் ஒரு நாள் “சினிமா பாட்டுப்புத்தகங்களை ஏன் நூலகத்தில் வாங்குவதில்லை“ என்று கோவித்துக் கொண்டார் “பாட்டுப் புத்தகம் வேணும்னா கோவில் முன்னாடி இருக்கிற பெட்டிகடையில விற்குறாங்க. பத்துப் பைசா குடுத்தா கிடைச்சிரும். சினிமா பாட்டுப் புத்தகமெல்லாம் லைப்ரரியிலே வாங்க முடியாது “என்றார் நூலகர் “ஏன் சினிமா பாட்டுபுத்தகம் படிக்கிறது தப்பா“ என்று …

நூலக மனிதர்கள். 17 கனவின் முகம் Read More »

நூலக மனிதர்கள்-16 இரண்டாம் பாகம்

“நீங்க எடுத்திருக்கிறது நாவலோட இரண்டாம் பாகம் . முதல் பாகம் லெண்டிங் போனது இன்னும் வரலை“ என்றார் நூலகர் “பரவாயில்லை சார்.  நான் இரண்டாம் பாகம் படிக்கிறேன் “என்றார் அந்த வாசகர் நூலகர் வியப்போடு பார்த்தபடியே “கதை புரியாதே“ என்றார் “படிக்கிறதை வச்சி புரிஞ்சிகிட வேண்டியது தான். கல்யாணத்துக்கு முன்னாடி என் வொய்ப் அவ வீட்ல எப்படியிருந்தா.  காலேஜ்ல எப்படி படிச்சா. எந்த ஊருக்கெல்லாம் டூர் போனா எதுவும் எனக்குத் தெரியாது. முதல்பாகம் தெரியாமல் நான் அவளைக் …

நூலக மனிதர்கள்-16 இரண்டாம் பாகம் Read More »

ஏழுதலை நகரம்

சில தினங்களுக்கு முன்பாக லா.ச.ராவின் புதல்வர் சப்தரிஷியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது“ உங்கள் புத்தகங்களிலே மிகவும் பிடித்தது ஏழு தலை நகரம். அதை உப பாண்டவம் நாவலுக்கு இணையாகச் சொல்வேன். குழந்தைகளுக்கான நாவல் என்று சொன்னாலும் அது சிறுவர்கள் மட்டும் படிக்க வேண்டியதில்லை. பெரியவர்களும் படிக்க வேண்டும். இப்படி ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தை நான் படித்ததில்லை. என் மகள் அதை விரும்பிப் படித்தாள். நாங்கள் சேர்ந்து அந்தக் கதையைப் பலமுறை படித்திருக்கிறோம். கண்ணாடிக்காரத் தெருவும் அதில் …

ஏழுதலை நகரம் Read More »

அஞ்சலி

தமிழ் பதிப்புலகின் முன்னோடி ஆளுமையான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச தரத்தில் தமிழ் புத்தகங்களை வெளியிட்டவர் ராமகிருஷ்ணன். நேர்த்தியான வடிவமைப்பு. அச்சாக்கம் எனப் புத்தக உருவாக்கத்தைக் கலைப்படைப்பாக மாற்றியவர். அவர் உருவாக்கிய தற்காலத் தமிழ் அகராதி ஈடு இணையற்றது. க்ரியா பதிப்பகம் போலப் புத்தகம் வெளியிட வேண்டும் என்ற அளவுகோலை பதிப்புலகிற்கு உருவாக்கித் தந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். தேர்ந்த இலக்கிய வாசகர். மிகச்சிறந்த எடிட்டர். அவரது முயற்சியின் காரணமாகவே ஆல்பெர் …

அஞ்சலி Read More »

நூலக மனிதர்கள் 15 சாகசத்தின் பின்னால்

பள்ளி வயதில் நூலகத்திற்குச் செல்லும் போது காமிக்ஸ் புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்று தான் முதலில் தேடுவேன். பொதுநூலகங்கள் காமிக்ஸ் புத்தகங்களை வாங்குவதில்லை. காமிக்ஸ் புத்தகம் என்பதை ஏதோ தீண்டத்தகாத பொருளாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்ற பள்ளிச் சிறுவர்கள் முதலில் தேடுவது காமிக்ஸ் தான். அதுவும் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் கிடைக்குமா என்று பரபரப்பாகத் தேடுவேன். பள்ளியின் அருகிலுள்ள பெட்டிக்கடை ஒன்றில் காமிக்ஸ் புத்தகங்கள் விற்பார்கள். அதை விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் அங்கேயே அமர்ந்து …

நூலக மனிதர்கள் 15 சாகசத்தின் பின்னால் Read More »

எல்லை கடந்து.

17 நிமிஷங்கள் ஓடக்கூடிய குறும்படம் Nefta Football Club’ 2018ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Yves Piat. சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்களாக உள்ள இரண்டு சிறுவர்களைப் பற்றியதே கதை. சகோதரர்களான அவர்கள் துனிசிய கிராமத்தில் வசிக்கிறார்கள். ஒருநாள் அல்ஜீரியாவின் எல்லையில் பாலைவனத்தின் நடுவில் கைவிடப்பட்ட கழுதை ஒன்றைக் காணுகிறார்கள். அந்தக் கழுதை போதை மருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவது. கழுதையில் உள்ள …

எல்லை கடந்து. Read More »